வேட்டையாடி
பாலமுருகன்
பார்வையற்ற சிறுமி
சொல்லொணாத இனிமையில்
பாடிக்கொண்டு
தெருவைக் கடக்கிறாள்.
அவள் குரலொலிக்கும் இடமெல்லாம்
பதுங்கியிருந்த இன்பமெனும் மிருகம்
வீழ்கிறது.
துக்கம் தோய்ந்த சிரிப்பால்
அவள் அவற்றைச் சாகடித்தாள்
கரங்களால் துழாவி
அதன் உடலை நார்நாராய்க் கிழித்து
வானமெங்கும் பறக்கவிட்டபடி
வேறொரு தெருவுக்குள் செல்கிறாள்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|