Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
சிதறிய ஈரங்கள்
மலர்மகள்

அறுந்து போன கனவுகளை
முடிச்சிட்டுப் பார்க்க
முயற்சிக்கும் சாத்தியக் கூறுகளான
தளத்தில்
நினைவுகளின் வசீகரத்தை
அண்மைக்கு எடுத்துவர
எத்தனிக்கும்
ஏகாதிபத்திய தூரத்து புள்ளிகள்.

விழி உதிர்க்கும் கண்ணீரின்
சொட்டுச் சொட்டான
துளிகளின்
உச்சரிப்பில் அலைபாயும்
விசாரணைத் தளத்தில்
விரல்களின் பிரிவுகளில்
நேசத்தை செருகும்
விசுவாச மனத்தில்
மிச்சமிருக்கும் சேமிப்புகள். .

வேறொரு களத்தில்
இப்படியாக
உன்னை முற்றிலும் சந்திக்க
விரும்பும் என்
தேடல்களின் ஈரங்கள்.

கோணிப்பையில் திணிக்கப்படும்
என் குரல்களின்
சமாதான நிராயுதமறிந்தும்
விரிக்கப்பட்ட இதயத்தில்
ஈட்டியை எறியும்
நிரந்தரப் பணியை
நியதியின் சாதனைக் குறியீடாய்
அடையாளம் காட்டும்
உன்
கீறல்களின் வெளிச்சங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.