கடல் முகம்
ஜி.எஸ். தயாளன்
பேராற்றலின் தன்னடக்கமாக
அமைதியில் விரிந்திருக்கிறது கடல்
காற்றின் அழுத்தம் தாளாது
நுரைபொங்க கொந்தளிக்கிறது சிலநேரம்
அலைகளின் ஆழ்கடல் பயணம் போல
உள்வாங்கி கிடக்கும் சிலநேரம்
மூன்று பனை உயரமெடுத்து
ஆர்ப்பரித்து வரும் சிலநேரம்
ஒன்றுமறியா பச்சைக் குழந்தையாக
தூங்கிக் கொண்டிருக்கும் சிலநேரம்
கடலுக்கு
ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு முகம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|