காத்திருக்கும் பின்னிரவு
மு. அப்துல்லா
கட்டி முடிக்கப்படாத
கட்டிடங்களுக்கு நடுவிலே
எங்களுக்கிடையே
பலத்த உரையாடல்
வலுப்பெற்று நிகழ்ந்தேறியது.
ஆள் அரவமில்லா
அந்த வெளியில்
யாருமற்ற வேளையில்
யாரே முகம்
தெரியா ஒருவர்க்காக.
நடுநிசியில்
நாய்கூட குரைத்து, குரைத்து
ஓய்ந்து போனது.
எங்கள் கருத்து
முழுவதும் செயல்வடிவம்
பெறாமல் போய்
சம்மதிக்க செய்யும்
முயற்சியில்
தோற்றுப் போவோமோ
எனக் கூடத் தோன்றியது.
ஏதேனும் ஒரு
அதிசயம் நடக்காதா
என்றொரு ஏக்கம்
முடிவற்றதாய் தொடரும்.
இருந்தாலும் காத்திருப்போம்
இன்னொரு
பின்னிரவுக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|