வாங்கப்படாதவை
மு.செல்லா
விற்பதும், வாங்குவதுமாய்
அன்றாடம்
வெளியேறிக் கொண்டிருந்தன
பெரும் பொருட்கள்
நகரத்து சந்தடி
சந்தையிலிருந்தும்,
மனதிலிருந்தும்.
விற்பவைகளால்
விரைவில் நிரம்பி விடுகின்றன
கடையெங்கும்
கல்லாப் பெட்டிகள்!
அங்கே. . .
நெரிசல் வாகனங்களின்
சக்கரங்களில் சிக்கி
கவனிப்பாரற்று
முனங்கிக் கிடந்தன
யாராலும் வாங்கப்படாத
விவசாயிகளின் மனங்கள்!
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|