Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
சாகஸங்கள்
- பா. திருச்செந்தாழை

மறுபடி நிரூபணமாகியுள்ளது
உங்களின் அதிஷ்டம்
நெரிசல் பேருந்தில்
சன்னலோர இருக்கையுடன்
இம் மலைப்பாதையில்
பயணத்தை துவக்குகிறீர்கள்
இடவல திருப்பங்கள்
எதிர்பாரா சடன் ப்ரேக்குகளென
சிலிர்பேற்படுத்தும் சாகஸத்தை
ஒத்திருக்கிறது பயணம்
நின்று கொண்டிருந்த
மலை ஜாதிப் பெண்ணொருத்தி
உங்கள் மடிமீது கிடத்துகிறாள்
சிரித்தபடி உறங்கும்
கறுங் கூழாங்கல்லைப் போன்ற மழலையை
ரசித்த சாகஸத்திலிருந்து
அக்குழந்தையின் தூக்கத்தை
காப்பாற்றும் விதம்
துவங்குகிறது உங்களின் சாகஸம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.