குருபிரம்மா
-சிவசங்கர்
சீழ்பிடித்து அழுகிய
உறுப்புகளை அரிந்து
பொரித்த சிப்ஸ்களை
கொண்டு
எங்கள் குடியைத் தொடங்கியிருந்தோம்
பிரம்மச்சாரி நண்பனும்
செங்கல் பொறுக்கியும்
தத்தம் கடப்பாறையோடு
கலந்து கொண்டனர்
அத்வானித்து களைத்திருந்த
எனக்கு
(காஷ்மீரின் பச்சை)
சேவலை
பரிசளித்தனர் பொரிக்க
சேவல் அறுக்கும் கத்தி
கிறுக்கு பயலிடம்
கத்தி என்னிடம்
வரும் பட்சத்தில்
சேர்த்து அறுப்பேன்
சேவலோடு
ஒரு கிழவனின் கொட்டையையும்
கிழவனின் கொட்டை
பயன்படாது - எங்கள் சிப்ஸ் தயாரிப்புக்கு
அங்கு பொழுது விடிவது
எங்களுக்கு உகந்ததல்ல
(முஹம்மது அஃப்சலுக்கும், ஏகலைவனுக்கும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|