Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
முகவரி தேடுகிறேன்
- ஹரணி

ஆளுக்கொரு திசையைக்
காட்டுகிறார்கள்
ஏற்கனவே குழப்பமுடனிருக்கும்
எனக்கு. . .
என்னை எதிர்கொள்ளும் நீயெப்படி
எதிர்வினை காட்டப்போகிறாய்
என்ற ஊகமெல்லாம் எனக்கில்லை
எதுகாட்டினாலும்
பெற்றுக் கெள்ளவே தீர்மானமுடன்
உன் முகவரியைத் தேடுகிறேன்.
ஒரு சமயம் கோயிலுக்குப் பக்கத்தில்
என்கிறார்கள். . .
ஒரு சமயம் பச்சைக் கட்டிடத்திற்குப்
பின்னால் என்கிறார்கள். . .
ஒரு சமயம் அரிசியரைக்கும் மில்லுக்குப்
பக்கத்தில் என்கிறார்கள். . .
நாலாவது தெருவில் ஒரு கம்பெனிக்குப்
பின்னால் என்கிறார்கள். . .
எல்லாவற்றுக்கும் தலையாட்டி
அலைகிறேன் நீ யென் பக்கத்தில்
இல்லாமல் போனதால். . .
ஒருவேளை கடைசிவரை முகவரி
கிடைக்காமல் போனாலும்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை
தவறான முகவரிக்கு என்னைத்
திசைதிருப்பியிருப்பாய் என்று உன்மேல். . .
உன்னிருப்பு மாறியிருக்கலாம்
நீ மாறியதுபோன்று. . .



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.