Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
இலக்கிய முற்றம்

மரணகாலக் குறிப்பு
- சரவணன் 1978

ரயில் வருமெனத் தெரிந்தும்
முடிவற்று நீளும் இந்தத் தண்டவாளத்தில்,
நீயும் நானும் உடல்கள் உரச
நடந்து கொண்டிருக்கின்றோம்.
தண்டவாளத்தில் அழுந்திச் செல்லும்
ரயில் சக்கரங்கள் போல,
என் விரல்கள் உன் முதுகுப்பரப்பில்
நகர்ந்து அலைகின்றன.
ரயில் நமக்குப் பின்னால் வந்தது-அது
நம்மை வாழ்த்தி, நமக்கு வழிவிட்டு,
தண்டவாளத்தை விட்டிறங்கி,
தனது எல்லாப் பெட்டிகளையும்
இழுத்துக் கொண்டு, மண்ணில் ஓடுவதாக
நமக்கு ஒரு பிரம்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.