Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
ஜனவரி 2006
தலையங்கம்

எலும்புக்கூடுகளின் ஜனநாயகம்
ஆசிரியர்

2002- குஜராத்தில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசால் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் இறந்து போனவர்கள், காணாமல் போனவர்கள் இவர்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்கள் இதுவரை இல்லை.

குஜராத் கலவரத்தின்போது பந்தன்வாடா கிராமத்தில் (பஞ்சமஹால் மாவட்டம்) 29பேர் காணாமல் போயினர். அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளும் இல்லாத சூழ்நிலையில் 2005 டிசம்பர் 28 அன்று பந்தன்வாடாவின் பக்கத்திலிருக்கும் லூனாவாடா கிராமத்தில் இருந்து 8பேர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. 26 உடல்கள் அந்தப் பகுதியில் புதைக்கப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியும் எலும்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பக் கோரியும் கலவரத்தில் தன் மகனை தவறவிட்ட தாய் ஒருவர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் சட்டவிரோதமாக பிணங்களை தோண்டி எடுத்ததாக ஒரு சமூக ஆர்வலர் உட்பட 11பேர் மீது குஜராத் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


ஆசிரியர் குழு

ஆசிரியர்
ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர் அலி
நிர்வாக ஆசிரியர்
ஹாமீம் முஸ்தபா

உதவி ஆசிரியர்கள்
தமிழ்ப்பிரியன்
ம. ராஜசேகரன்

ஷிஃபா காம்ப்ளக்ஸ்,
முதல் மாடி,
142, வடக்கு வெளிவீதி,
யானைக்கல்,
மதுரை - 625 001.
தொலைப்பேசி: 0452- 5371514
[email protected]

தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.100
ஆயுள் சந்தா: ரூ.1000

ஆகஸ்ட்-05 இதழ்

செப்டம்பர்-05 இதழ்

நவம்பர்-05 இதழ்

நம்முடைய தகவல் ஊடகங்களோ இச்செய்தி குறித்து தணிக்கை செய்யப்பட்ட பி.டி.ஐ.ன் தகவலை மீறி ஒருவார்த்தை கூட பேசவில்லை. வெளியிட்டிருந்த செய்தியும் “2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு ஏற்பட்ட...” என்றும் புனையப் பட்ட முன்கதைச் சுருக்கத்தோடு வெளியிடுகின்றன. கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்டதல்ல; தற்செயலானது என்று உறுதிபடுத்தப்பட்ட பிறகும் பத்திரிகைகள் தொடர்ந்து இச்சொல்லாடலை பயன்படுத்துவதன் நோக்கம் முஸ்லிம் வெறுப்பைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.
ஒரு உணர்ச்சிவசப்பட்ட சூழலில் நடப்பது தனிமனிதப் படுகொலை. ஆனால் மிக கவனமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது கூட்டுப் படுகொலைகள். கூட்டுப் படுகொலைக்குப் பின்னால் ஒரு நோக்கமிருக்கிறது, அரசியலிருக்கிறது, கருத்தியலிருக்கிறது, அரசு எந்திரத்தின் ஆதரவும் இருக்கிறது. ஜாதியை, இனத்தை, மதத்தை, மொழியை ஏதோ ஒரு வெறியை தூண்டிவிட்டு இந்த படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. இத்தகைய கொலைகள் வியட்நாம், ஈராக், ஆப்பிரிக்க நாடுகள், இலங்கை, இந்தியா என எல்லா இடங்களிலும் பரவலாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்டுகள் இதுபோன்ற கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தினார்கள். போர் முடிந்தவுடன் இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தபோது, அமெரிக்கா, ரஷ்ய நாடுகளைத் தவிர வேறு பல நாடுகள் (குறிப்பாக பிரிட்டன்) வேண்டாம் என்றன. ஜனநாயகத்தை நிலைநாட்டுவது சம்பவங்களை மறைப்பதில் அல்ல, அதை வெளிக்கொண்டு வருவதன் மூலம்தான் சாத்தியப்படும் என்ற அடிப்படையில் ‘நியூரன்பெர்க் டிரையல்’ விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்திய தேசத்திலும் காலம் காலமாக சாதியின் பெயராலும், தீண்டாமையின் பெயராலும் கொடுமை நடைபெற்ற போது அதை எதிர்த்த மக்கள் காணாமல் போனார்கள். சாதியத்தின் வஞ்சனையிலிருந்து தப்பிப்பதற்காக அம்மக்கள் இஸ்லாத்திற்குள் நுழைந்தபோது முஸ்லிம்கள் காணாமல் போக ஆரம்பித்திருக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லிம்கள் காணாமல் போனதில் சாதி அடிப்படைவாதமும், மத அடிப்படைவாதமும் இணைந்தே இருக்கின்றது. காணாமல் போன முஸ்லிம்களை, அடித்தட்டு மக்களை, இதர ஜனநாயக சக்திகளை தேடவேண்டிய காலம் இது. இந்த தேடல்களின் சந்திப்பில் தான் கூட்டுக் கொலைகள் முடிவுக்கு வரும்.

- ஆசிரியர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com