Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
இலக்கிய முற்றம்

ஹைபுன்கள்
- அன்பாதவன்

எல்லைகள் இதுவென
எப்படி தீர்மானிக்கிறீர்கள். . ?

கடல் எல்லைத் தாண்டியதாய்ச் சொல்லி
கட்டுமரங்களை சுட்டு வீழ்த்துகிறீர்கள்.

பாறைகளைக் குடைந்து தாவிவரும்
நதியின் அலைகளில்
வரைகிறீர்கள் உங்கள் அத்துக்களை.

குறுஞ்சிரிப்புடன் நுரைத் ததும்ப
ஓடுகிறது நதி.

பாலையின் கம்பிகளைக் கடந்தால்
வேறொரு தேசம்
தீவிரவாதியாய் உளவாளியாய்
பெயர் சூட்டிய பகல்களறியா
அந்தகாரச் சிறை வாசம்

சுவர்களா பிடிக்கும் மனிதர்களை?

எல்லைத் தாண்டிய பயங்கரவாதமெண்ணிக்
கவலைப் படுகிறவர்களே
கண்ணுக்குப் புரனாகா
பண்பாட்டு படையெடுப்புகளை
எப்படி தடுப்பீர்கள். . ?

பூகம்பத்துக்கில்லை கட்டுப்பாட்டெல்லை
இடிபாடுகளில் செத்தனர்
இருதேச மக்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.