பொழிவு சா.முகில் கவிதைகள்
குதறிய உரையாடலோடு
ரத்தம் குடிக்கும் வார்த்தை
தூவி
மௌனமாய் விரைந்தாய்
பிறிதொருநாள்
அந்த
மௌனமாய் கூப்பிடும்
குளத்தாங்கரை மஞ்சள் மௌனம்
இன்னும்
என் பார்வையில்
அதிர்கிறது.
***
என் காதலின்
கலைந்து போன
வடிவங்கள்
வாடகை வீட்டின்
அலமாரியில் உட்கார்ந்து
தலைசீவி
ஒத்திகையிடுகிறது
தொலைத்த சாவியை
யோசிக்கும்
மனசு
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|