Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
என் கடவுள் எந்தக் கோயிலிலும் இல்லை
ஜி. மஞ்சுளா

Modern art எதன் பொருட்டும்
எந்தக் கடவுளும்
விசாரிப்பதில்லை
மக்கள் வாழ்வை.

மக்களின் மகோன்னதங்களையும்
அழிவுகளையும்
அவன் அறிவதில்லை.

மதங்களின்
காப்பகமாகவே
இங்கு கோயில்கள்
அங்கு
அவனைத்தவிர
வேறு எல்லாமே
வழிபடப்படுகின்றன.

அரசியல் மதமாக்கப்படுவதும்
மதம் அரசியலாக்கப்படுவதும்தான்
இங்கு
தேசிய விளையாட்டு.

விளையாட்டில் பங்குபெற
தகுதிகளற்று இருப்பதே
தகுதி.

அதிகாரங்களால்
கட்டப்பட்ட
கோட்டைச் சுவர்களில்
பல்லிகளாகி கத்துகின்றனர்
மக்களின் பிரதிநிதிகள்.

எந்தச் சத்தமும்
பலிப்பதில்லை
எந்தப் பாவிக்கும்
புரிவதில்லை.

தேர்தல் நேரங்களில்
கிரகங்கள் மாறினாலும்
ஆட்சி பிடிப்பவர்களின்
அரசியல் ஜாதகம்
அப்படியேதான் உள்ளது.

அறுத்து எடுக்கமுடியாத
சீமை
அவனவனே விழுங்கியாக
வேண்டும்.

மனித வேட்டைகளை
மிருகங்கள்
நடத்துகின்றன.
பள்ளிகளில்
பாம்பாட்டிகள்
மகுடி ஊதி
விளையாடுகின்றனர்.

கடவுளைக்
கல்லாக்கி
நீதி தேவதை
கனவாகிப் போனாள்

வாழ்வைப் போலவே
மரணமும்
எதன் பொருட்டும்
விசாரிக்கப்படுவதில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP