Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
நிகழ்வுகள்

‘கதா’ 2006
- சுப்ரபாரதிமணியன்

City Stories

1

கதா திருவிழா ஆண்டுதோறும் சிறந்த சிறுகதையாளர்களை கௌரவித்து வருகிறது. கதாசூடாமணி விருது, கதாவிருது, இளம் எழுத்தாளர்களுக்கான விருது என சுமார் ரூ.3 லட்சம் இவ்வாண்டு வழங்கப் பட்டாலும் அதில் தமிழ்ச் சிறுகதையாளர்கள் இடம்பெறவில்லை. மலையாளத்தில் என்.எஸ்.மாதவன், சந்தோஷ் ஆகியோர்க்கு வழங்கப்பட்டது. என்.எஸ்.மாதவனுக்கு இது நான்காவது கதாபரிசு, தமிழில் யாரும் சிபாரிசு செய்யப்படாதது துரதிஷ்டமே. டெல்லியில் கதாவிழாவின் போது ஜனவரி இரண்டாம் வாரத்தில் கண்ணில் தட்டுப்பட்ட மலையாளம், தமிழ் இதழ்களின் சில தலைப்புகள்:

நாடு - மலையாள சினிமா இதழ் : ஜனவரி 5

அட்டையில் நயன்தாரா மதுக் கோப்பையை உயர்த்தியபடி புன்னகைக்கும் படமொன்று. உள் தலைப்பு : “நயன்தாரா தமிழரை பிராந்து பிடிப்பிக்கும்”

அதே இதழில் இடம் பெற்ற இன்னும் 2 செய்திகள்
1. (கவர்ச்சிப் படத்துடன்) ‘செற்பக் காரருடெ உறக்கம் கெடுத்தல் வேண்டி மாத்ரம்’
2. (மோகன்லால் - டி.வி. சந்திரன் படங்களுடன்)

“லால் இப்போள் உறும்புகளை ஸ்நேகிக்குன்னு” டி.வி. சந்திரன் இயக்கத்தில் வைக்கம் முகமது பஷீரின் கதையை மையமாகக் கொண்டு மோகன்லால் நடிக்கவிருக்கும் படம் பற்றியக் கட்டுரை.3.

குங்குமம் - தமிழ் வார இதழ் : ஜனவரி 14
‘நயன்தாரா சாக்லெட் பேப்பருக்குள் வைக்கப்பட்ட ஹெராயின்” : தலைப்பு

2.

ஒரு வார கதா திருவிழாவின் நூற்றுக் கணக்கான அமர்வுகளில் “நகரங்களைப் பற்றி எழுதுவதும், நகரங்களை மாற்றுவதும்” என்பதை மையமாகக் கொண்டு உரைகளும், விவாதங்களும் இடம் பெற்றன. விழாவில் இறுதி உரையாற்றிய இயக்குனர் ஷியாம் பெனகல் நகரம் அவரை பாதித்திருப்பதை விவரித்தார்:

நகரம் ஒரு மாயப்பிசாசாக இருக்கிறது. எல்லோரையும் கறைபட்டவர்களாக ஆக்குகிறது. நகரங்களுக்கு இடம் பெயர்வு உலகமயமாக்கலில் சாதாரணமாகிவிட்டது. ஆத்மாவற்றது நகரம். அதற்கு சரித்திரங்களோ வேர்களோ இல்லை. அது தனக்கான அனுதாபத்தையும் இழந்து விட்டது. கௌரவமாக வாழ்வதற்கான அருகதைகளை நகரங்கள் இழந்துவிட்டன. கிராமங்களின் புனிதத்தை அடைவதற்காக நகரங்களில் அமைக்கப்படும் ‘மாதிரிகள்’ போலிகள். யதார்த்தமற்றவை. ஜனநெரிசலும், மக்கள் தொகையும் மூச்சிறைக்க வைப்பவை. நகரங்களில் சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அழகுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கிராமங்களுக்கு இறந்த காலம் இருக்கிறது. எதிர்காலம் இல்லை. கிராமங்கள் நினைவிடங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன. நகரங்களை விவரிக்கும் வெகுஜன திரைப்படங்கள் போலியானவை. அவை புதிய நகரங்களைத் திரைப்படங்களில் உருவாக்குகின்றன. இந்தியாவிற்கு வெளியிலான நகரங்களை அவை கட்டமைக்கின்றன. ஐரோப்பிய நகரங்களையோ, நியூயார்க்கையோ, ஸ்காட்லாண்டையோ அவை நம்முடையதாய் கட்டமைக்கின்றன. கிராமத்தினரும் கிராமங்களில் வாழ்வதை விரும்புவதில்லை. நகரங்களின் கவர்ச்சி கவர்கிறது. நகரங்கள் அவர்களை விழுங்குகின்றன.

அரசின் நகரங்கள் பற்றின விவரணப் படங்கள் அவமரியாதையைக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றைப் பார்க்க நிர்பந்திக்கப்படுகிறபோது அவற்றின் மீது வெறுப்பு உருவாகிறது. திரைப்படங்களும், விவரணப் படங்களும் முன்பு அதீத செலவீனங்களுக்கான விடயங்களாக இருந்தன. தற்சமயம் செலவு குறைந்த விடயங்களாகியதற்கு புதுக் கருவிகள் காரணம். ஒருவர் தனக்காக எடுக்கும் படங்களை எல்லோருக்குமானதாக ஆக்குவதே திரைப்படக் கலையின் வெற்றியாகும். வீடியோ சாதனங்கள் மூலம் குறைந்த செலவில் படங்கள் எடுப்பதும், அதன் பிரதிகளை குறைந்த விலைக்கு விற்பதும், கிராமங்களுக்குக் கொண்டு சென்று இலவசமாக காட்டுவதும் இன்றைக்கு ஏதுவாக இருக்கிறது. அவை மக்களைச் சென்றடைவதில்தான் அதன் நோக்கமும் உள்ளடங்கியிருக்கிறது.

3

லெஸ் முர்ரே என்ற ஆஸ்த்திரேலியா கவிஞரின் கவிதை வாசிப்பு அமர்வில் இடம் பெற்ற ஒரு கவிதை:

‘இருப்பின் அர்த்தம்’

மொழியைத் தவிர எல்லாமும்
இருப்பின் அர்த்தத்தை அறிந்தவை,
மரங்கள், செடி கொடிகள், நதிகள் காலம் என
இவை இருப்பின் அர்த்தம் தவிர வேறு
அறிந்திருக்கவில்லை.

கணத்திற்கு கணம் பிரபஞ்சமாக
அதை வெளிப்படுத்துகின்றன.

இந்த உடலின் முட்டாள் தனமும்
அதன் பாகமாய் வாழ்கிறது
அதன் பெருமையுடன் அதனுள்ளும்
ஆனால் பேசும் எனது மனதின்
அறியப்படாத சுதந்திரத்துடன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com