Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
இலக்கிய முற்றம்

பயணம்
மலர்மகள்

சன்னலோர இருக்கையில்
பேருந்துப் பயணம்...
தினமும் சவுகரியமாக...

முகமறைந்து வீசும்
காற்றின் ஸ்பரிசம்
மயிற் கற்றைகளுடன்
சண்டையிட்டு...

வரவேற்பு குரலெடுத்து
சப்திக்கும்
மரத்தின் கிளைகள்

பட்டாம் பூச்சிகளின்
குறுக்கெழுத்துப் புதிர்...
விளையாட்டு நடுவே...

கடந்து போய்க் கொண்டிருக்கும்
நிமிர்ந்த தந்திக் கம்பங்கள்

நெருடி விழும் மனதைத்
தடவித் தரும் புன்னகையாய்
ஆற்றோர நாணல்கள்

பயிரின் மணங்களுடன்
உறவின் ஊமைக் காயங்களுடன்
நனைந்த பஞ்சாய்
கனக்கின்ற நெஞ்சம்...

இயற்கையின் சுவீகரிப்பில்
மிதக்கும் சிலமணிநேரம்...
இலவம் பஞ்சாய்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.