Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006

அச்சங்களை விதைத்து செல்லும் அதிகார மையங்கள்
தமிழில் : டாக்டர். ஜீவானந்தம்

நாம் முரண்பாடுகளும், மோதலும் மலிந்த உலகில் வாழ்கிறோம். இதில் வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாத முக்கிய இடம் பெறுகிறது. வர்க்கப் போராட்டம் பல முகங்களும், குழப்பங்களும் கொண்டதாக இருந்தபோதும் தற்போது அதற்கான பாதை தெளிவாகியுள்ளது.. ஒருபுறம் அரசு, தனியார் என அனைத்து அதிகார சக்திகளும் மையப்படுத்தப்பட்டு நெருக்கமாகி உள்ளன. மறுபுறம் மாபெரும் மக்கள் சக்தி உள்ளது. பெரும்பான்மை மக்கள் எந்த முக்கிய பிரச்சனையிலும் ஈடுபட முடியாதவர்களாக உள்ளார்கள் என்பதும்; அவர்களுக்கு அதற்கான வசதியில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அதிகார மையங்கள் தங்களை வலிமைப்படுத்திக் கொள்வதை சோர்வின்றிச் செய்து வருகின்றன. இதற்காக எந்த சந்தர்ப்பத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பூகம்பம், 11/9 என எதுவானாலும் அதன் குழப்பத்தையும், பயத்தையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மக்கள் கவனம் வேறுபுறம் திரும்பினால் ஆபத்து என்பதை உணர்ந்த அவர்கள் அச்சத்தை வளர்க்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் இதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அவர்கள் தினம் தினம் வளர்த்து வரும் ராணுவமயம், உலகின் உயிரின வாழ்வையே கேள்விக்குறியாக்கி வருகிறது என்பதையும் நாம் சற்றும் மறந்துவிடக் கூடாது. இது ஜனநாயகத்தையும், விடுதலையையும் குறிவைத்துத் தாக்குகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இதுவே தாராளமயக்காரர்களின் அடித்தளம்.

மனித குலத்தின் மீது முதலாளித்துவம் சுமத்திவரும் எல்லையற்ற வன்முறைகளையும் சோகத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். இது திட்டமிடப்பட்டே அமெரிக்காவாலும் அதன் கூட்டாளிகாளாலும் செப்டம்பர் 11க்குப்பின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஜநா மனித உரிமைக் கமிஷன் தலைவர் திருமதி மேரி ராபின்சன் அமெரிக்கா தனது கண்மூடித்தனமான வெடிகுண்டுத் தாக்குதலை நிறுத்தாவிட்டால், ருவாண்டா போன்ற கொலை வெறியாட்டம் தவிர்க்க முடியாததாகி விடும் என்கிறார். உண்மையில் அமெரிக்காவின் ராணுவத் தாக்குதலின் பின் ஈராக்கில் பட்டினிப்போர் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து 75 லட்சமாகியுள்ளது. மேரி ராபின் சனின் இந்த எச்சரிக்கையை அமெரிக்க எதிர்த்துள்ளது. அலட்சியப்படுத்தி இருட்டடிப்பு செய்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு உணவு அனுப்பக் கூடாது என்று தடை விதித்தது. உயிர் வாழ்வு உதவிகள் நிறுத்தப்பட்டன. மக்கள் பட்டினி கிடந்து சாகட்டும் என்ற வக்கிரமே இதற்குக் காரணம். ஐரோப்பாவின் ஊடகங்கள் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை. அமெரிக்காவிலோ இதுபற்றி பேச்சே இல்லை. மக்களைப் பட்டினி போட்டுக் கொல்வது பற்றி மேலைநாட்டின் மக்களுக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. இனப்படுகொலை என்பது அம்மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எனவேதான் அவர்கள் மௌன சாட்சியாக வாழ்கிறார்கள்.

ராணுவத்தாக்குதல் நடத்தப்படும் எனும் ஐ.நா உணவு விவசாய அமைப்பின் எச்சரிக்கையால் நகர்புற மக்களை கிராமங்களுக்கு பயந்தோடச் செய்தனர். தாக்குதலின் பின் 80ரூ விவசாய நிலம் பாதிக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது. இதனால் அடுத்த ஆண்டின் பஞ்சமும் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஈராக்கிலும், செர்பியாவிலும் மின் நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இதனால் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இது ஒரு உயிரி போரே (க்ஷஐடீடுடீழுஐஊஹடு றுஹசு) நகரங்களிலிருந்து தப்பி கிராமங்களுக்கு ஓடுவோர்க்கு வழியெங்கும் கண்ணி வெடிகள் காத்துக் கிடக்கின்றன. தினமும் 10-20 பேர்களை கண்ணி வெடிகள் கொல்கின்றன, ஊனப்படுத்துகின்றன. இவர்களில் பெரும் பான்மையினர் குழந்தைகள்.

கண்ணி வெடிகளை அகற்றும் ஐநாவின் பணிகளை நிறுத்த, அமெரிக்கா நிர்பந்தித்ததால் சாவுகள் அதிகரித்துள்ளன. கொத்து குண்டுகள் எனும் புதிய முறைத் தாக்குதலால் சாவுகள் மேலும் அதிகமாகியுள்ளன. இந்த புதிய ஆயுதம் கட்டிடங்களை சிதைக்காது. இதை குழந்தைகளோ, மக்களோ தொட்டவுடன் வெடித்து மக்களைக் கிழித்து சுக்கு நூறாக்கி விடும். இதை அகற்றுவது கடினமானது. இது வியட்நாமில் பயன்படுத்தப் பட்ட கொடிய ஆயுதம். இவற்றில் 20-30ரூ இன்றும் அழிக்கப்படாமல் உயிருடன் உள்ளன. இன்றும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் போர்நின்ற பின்னும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவும் புதிதல்ல. மேலை நாடுகள் கடந்த நூற்றாண்டில் தாம் அடிமைப்படுத்திய நாடுகளில் இத்தகைய கொடுமைகளைச் செய்தது, அம்மக்கள் அது பற்றி உணர்வற்றவர்களாகவே உள்ளனர். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இரு அதிபயங்கர நாசங்கள் நடந்துள்ளன. ஒன்று தீவிரவாதிகளின் 11/9 தாக்குதல் அடுத்தது அதைவிடவும் மோசமான, திட்டமிடப்பட்ட மக்கள் படுகொலைகள். அரபு மண்ணில் நடக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் அக்கறை காட்டாத ஐரோப்பியருடன், அடிமைத்தனத்தால் பெரிதும் அவதிப்பட்ட இந்தியா, அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறது என்பது.

இந்தச் சூழலில் மக்களின் தகவல் அறியும் உரிமை தவிர்க்க முடியாத தேவையாகிறது. அமெரிக்கா உலகின் மறுபகுதியில் செய்துவரும் வன்கொடுமைகளை அந்நாட்டு மக்கள் அறியப் படாமலேயே இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் இதில் ஒரு பகுதியை அறிய நேர்ந்தால் கூட பெரும் எழுச்சியும் எதிர்ப்பும், அமெரிக்க அரசை நிலைகுலையச் செய்துவிடக் கூடும். அமெரிக்கா உலகின் எந்த நாட்டை விடவும் சுதந்திரம் பெரிதும் உள்ள நாடு. செய்தி அறியும் உரிமை முழுமையாக அங்கு உள்ளது. செய்தி இருட்டடிப்பை அரசு செய்வதில்லை. அரசு அவ்வப்போது முயன்றாலும் அதை முழுமையாகச் செயல்படுத்த முடியாது. இந்த இருட்டடிப்பைச் செய்பவர்கள் படித்த மேல்தட்டு அறிவு ஜீவிகளே. நமது பல்கலைக் கழகங்கள் இத்தகைய பயிற்சியையே மாணவர்களுக்குத் தந்து வளர்க்கின்றன. சுதந்திர நாளேடுகளும் இதையே செய்கின்றன. அதனால் தான் மக்கள் இருட்டில் உள்ளார்கள். தன் மக்களுக்குத் தெரியுமென்றால், ஒரு நாடு எப்படி வன்கொடுமையை மற்றொரு நாட்டில் செய்ய முடியும்? இந்தத் தடைகள் உடைக்கப்படும் போது, மக்கள் எழுச்சி பெரிதாக இருக்கும். உதாரணங்கள் நம்மை உறையச் செய்கின்றன. வார்த்தை எழவில்லை. ஆனால் இது ஒன்றும் புதிதோ, அரிதோ அல்ல. வரலாற்றில் இத்தகைய வன்கொடுமைகள் மதப்பாதிரியார் களாலும், மதச்சார்பற்ற புனிதர்களாலும் செய்யப்பட்டதை அறிந்திருக்கிறோம்.

இத்தகைய நம்பிக்கையற்ற வார்த்தைப் புலம்பலின் பின்னும் நாம் நம்பிக்கையுடன் மாற்றத்திற்கு முயன்றாக வேண்டும். உலகமயம்எனும் இந்த கவர்ச்சிகர நம்பிக்கை கட்டத்துக்குள் நின்றுதான் நாம் இதை எதிர்த்தாக வேண்டும். அதற்கு முன் உலகமயம் என்பது என்ன என்பது பற்றித் தெளிவு பெற வேண்டும். பல அரசியல் சொல்லாடல்கள் போலவே இதற்கும் வெளிப் படையான வார்த்தை அர்த்தம், பிரச்சார அர்த்தம் என இருவேறு பொருள் உண்டு.

வெளிப்படையான அர்த்தத்தில் நாடுகளை பொருளாதாரத்தில் இணைத்து உறவு கொள்ளச் செய்வது எனலாம். வணிகம் போலவே இதுவும் முழுமையாக நல்லது கெட்டது என முடிவு செய்ய முடியாதது. அதன் மனிதகுல விளைவுகள் மீதே அதன் நன்மை, தீமைகளை நிர்ணயிக்க முடியும்.

பிரச்சாரப் பொருளில், குறிப்பிட்ட வழியிலான சக்திகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச தனியார் நலங்களின் கூட்டு சக்தி எனப் பொருள் கொள்ளும் வகையிலேயே கடந்த 20 ஆண்டுகளாக இது அறியப்படுகிறது. மற்றவர்களின் நலன் என்பது முதன்மையல்ல. அவர்கள் நன்மையடைந்தாலும் அடையலாம், இல்லாமலும் போகலாம். பலர் இழப்புக்கே உள்ளாகின்றனர் என்பது தான் உண்மைநிலை.

இத்தகைய அர்த்தமற்ற சுயலாப வார்த்தை ஜாலத்தை வைத்துக் கொண்டு இதை எதிர்ப்பவர்களை ‘உலகமய எதிரிகள்’ என முத்திரை குத்துகிறார்கள். மாற்றங்கள் மாற்ற முடியாததென. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியாது என்பதை அறிவோம். நாம் கற்காலத்திற்குப் போக முடியாது. அவர்கள் ஏழைகளை நிர்மூலமாக்குகின்றனர். உலகமயம் எனும் உன்னத வார்த்தைக்குத் தவறான பொருள் தரப்படுகிறது. அதிகாரக் குவியலை நீக்கிய சமபலம் கொண்ட உலகமே உலகமயம். ஏற்றுக் கொள்பவர்கள் முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிரானவர்கள்.

உலகம் ஒன்றுபடுவதை அறிவுள்ள எவரும் எதிர்க்க மாட்டார்கள். உலகமயத்தின் தவறான உள்நோக்கம் பற்றியே ஆரம்பம் முதல் இடதுசாரிகள் சந்தேகப் படுகின்றனர். சர்வதேசப் பார்வை ஒருங்கிணைப்பு ஒற்றுமைதான் இடதுசாரியாளர்களின் உலகமய முயற்சியாக இருந்துள்ளது. இந்த உலக ஒற்றுமைக்கான பல செயல்பாடுகளையும் இதில் வெற்றிகளையும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

நன்றி - தி இந்து



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com