Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
இலக்கிய முற்றம்

எல்லா சேர்தல் எங்களைப் போலவே
ஜீவன் பென்னி

மிக நேர்த்தியான ஒரு சொல்லுடன்
அவர்கள் பிரிந்து விட்டார்கள்
அதுவரையிலிருந்த காதலிலிருந்து...

யாருமற்ற மௌனம்
அந்த அறை முழுவதும் தேங்கிக்கிடக்கின்றது

அவர்கள் பருகிய
தேனீர் கோப்பைகளும்
உட்கார்ந்திருந்த இருக்கைகளும்
ஜோடியாயிருக்கின்றன
பிரிவதற்கான அடையாளங்களுடன்

எல்லா பிரிவு நேரங்களும்
நமக்கருகிலே யிருக்கின்றன

யார் அடைத்தாலும்
அடைத்துக் கொள்கின்றன
அந்த பிரம்மாண்டமான ஓட்டலின்
வாசற்கதவுகள்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.