இலக்கிய முற்றம்
யாரோ தட்டுகிறார்கள்
மு. செல்லா
என் வீட்டுக் கதவை
யாரோ...
தட்டுகிறார்கள்.
கைகள் வலிக்கும் வரை
கரங்கள் சோரும் வரை
தட்டுவதாகத் தான் படுகிறது
கதவு திறக்கும் முன்
ஓய்ந்து போகும்
ஓசையுடன்.
ஒவ்வொரு முறையும்
தட்டப்படும் போது
கதவு திறந்து
நானவளைப்
பார்த்து விடுவேன் தான்
திறக்கப்பட வேண்டுமேயென
அமைதி காத்து
மறந்தும் விடுகிறேன்.
ஒரேயொரு முறை
தட்டும் முன்னே
திறந்து விட்டதால்
சந்திக்க வேண்டியதாகிவிட்டது
கதவுக்க வெளியே
கை ஓங்கி
பயந்து நிற்பதானவனை.
பெயர் கேட்டேன்
சொன்னான்
முகவரி கேட்டேன்
சொன்னான்
பின்னர் விசாரிக்கவேயில்லை
என் வீட்டு
முகவரியே சொன்ன அவனை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|