Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
இலக்கிய முற்றம்

காலமாதல்
க. அம்சப்ரியா

எல்லோருடைய தலைக்கு மேலும்
பறந்தபடியிருக்கிறது
சாவுப் பறவையொன்று
நமக்குப் பிரியமானவர்களை
சமயங்களில் அது கௌவிப்போகிறது
வெறுப்புக் குரியவர்களுக்கு நேர்கிற சாவு
நம்மை சலனிப்பதில்லை ஒரு போதும்.

நேர்ந்து விடுகிறது
யாருக்காகவோ ஒரு மரணவீட்டிற்கு
செல்ல வாய்ப்பதும்
ஒரு குவளை தேநீரை
சிரமப்பட்டு குடித்து வருவதும்
எவருடனும் பேசப்பிடிக்காத
அக்கணம் நமக்குள் நகர்த்தவும் செய்கிறது
மடிந்தவருடனான நம் நினைவுகளை.
கொத்தொடு குழந்தைகளைத் தின்று
சாவு தனக்கான ஏப்பத்தை
வெளிப்படுத்துகையில்
வழக்கம் போல் நமக்கு
அகாலத்தில் நேராத மரணத்திற்காக
சாவுப்பறவைக்கு
நன்றி சொல்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.