Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
கொந்தளிப்பின் இசை
தேவேந்திர பூபதி

அகாலத்தில் இசைத்துக் கொண்டிருக்கும்
உடைந்த நிலவின் நகக் கண்களில் இருந்து
உனக்கான ஒரு பாடலை உருவாக்குகிறேன்
காலத்தின் மிக முந்தையதான
ஒரு தலைமுறையின் பிரிவாற்றாமைப் பாடலாய்
காதல் நிறைந்தவனின் பின்மாலைக் கழிவிரக்கமாய்
மரணங்களால் விரைவுபடுத்தப்பட்டும்
முழுநிலவையும் தனக்குள் தக்கவைக்க
தத்தளிக்கும் அப்பாடலில்
எனது நிலக்காட்சி தொலைவில் தெரியும்
சிறுசிறு வீடுகளின் விளக்கொளியைப் போல்
துக்கமெழுப்புகிறது
உன் சருமத்தில் ஊர்ந்து திரிந்து
பரவசம் கண்ட என் நகக்கண்கள்
வளர்ந்து பௌர்ணமி நிலவாய்
உன் முற்றத்தில் நிற்கும் போது
அகாலத்தில் கடலலைகள் அப்பாடலை
உனக்கான கொந்தளிப்புடன்
இசைக்கத் துவங்கிவிடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.