Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

வார்த்தை ஜாலம்
பா. திருச்செந்தாழை

அலுக்கத் துவங்கிய
உன் உரையாடலில்
கிளை திரும்பும் பறவையென
வந்தமர்கிறது முற்றுப்புள்ளி.
பின் வந்த
உன் சொற்களெல்லாம்
தெருநாயின் குட்டிகளைப் போல
சாலையில் திரியத் துவங்குகின்றன.

*****

பகலெங்கும்
என் அறை சுவற்றில்
தன் துண்டு கண்ணாடியின் வழி
வெளிச்சம் பூக்கச் செய்த
எதிர் வீட்டுச் சிறுமி
பின்னரவின் சிறுநீர் கழிக்கும்
வேளையில்
மறுபடியும் ஆட்டுகிறாள் கண்ணாடியை.
பூக்காத பூவினால் குழம்பியவள்
பகலில் மட்டுமே
பூப்பூக்கும் என நினைத்தபடி
தூங்கச் செல்கிறாள்
அப்பூவின் பெயரை யோசித்தவாறே.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.