துளிப்பாக்கள்
முகவை முனீஸ்
நகங்களைக்கூட
வெட்டுகிறோம். . .
எல்லையை மீறுவதால்.
**
மணல்மேடுகளை. . .
கரையச் செய்யும்
சின்ன மழைத்துளிகள்.
**
பெருகும் கட்சிக் கொடிகள்
பறிபோய் விடுமோ?
மிஞ்சிய கோவணம்.
**
நாளுக்கொரு கட்சி
இன்னும் அப்படியே. . .
மின்சாரமற்ற கிராமம்.
**
பிஞ்ச வெளக்குமாறு
தயாரா இருக்கு
வரட்டும் மந்திரிப்பய. . .
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|