முத்தங்கள்
ஜீவன் பென்னி
பிளவுபட்ட பூமியின் வெளிப்பசியாய்
உயிருள்ள உன் முத்தங்களை
விழுங்கி முடித்தயென் உதடுகளின்
ஆழங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறாய்
இறகுகளை சேகரிப்பது போன்றும்
அடுத்தடுத்த நமதிந்த முத்தங்களின்
உணர்ச்சிகளை திரும்பப்
பெயர்த்துக் கொண்டிருக்கின்றன
எலும்புகளில்லாத நமது நாக்கும்.
முடிந்த முத்தங்களும்
வரும் முத்தங்களும்
எப்பொழுதுமே சுவாரஸியமானவை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|