Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

சிதறிக்கிடக்கும் உண்மைகள்
நந்தவனம் சந்திரசேகரன்

போலிகளால்
நிரப்பி வைத்திருக்கிறோம்
வீடுகளையும்
வீதிகளையும்

நிஜங்களின்
நிழல்கள் கூட
தலை நீட்ட முடியவில்லை
விகாரமாய் எழுந்து
பயங்காட்டுகின்றன
போலிகள்

தேடுதலுக்கான
அவகாசமோ
தேர்ந்தெடுப்பதற்கான
பொறுமையோ எதுவுமின்றி
அவசரப்பிடிகளில் சிக்கி
நசுங்கியபடியே
நகர்கிறது வாழ்க்கை

எதிர்பாராத
கோர விபத்தைப்போல்
உயிர்த்துடிப்பின்றி
சிதறிக்கிடக்கின்றன
உண்மைகள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.