அவர்களும் - அவைகளும் - நாங்களும்
மாடக்குளம் விசயகுமார்
உச்சுக் கொட்டல்களும் எரிச்சல்களும்
குவியும் ஒரு மையப்புள்ளியில்
கோப போதைகளின் குமட்டல்களில்
ஏறி இறங்கும் ஆதார சுருதி
ஏதேனும் ஒன்று இடறிவிட சிதறும்
பாதசாரிகளின் பொருள்கள்
ஏறி இறங்கும் பேருந்து நெரிசலில்
இடித்தல்கள் பாலருக்கும்
பச்சாதாபத்தாலோ கட்டாயத்தாலோ
கம்பு பிடித்து கடத்திவிடும் முணுமுணுப்புகள்
சுவாரசிய உரையாடல்களில் கரைந்து போக
கம்பில் களையும் தவசிகளில் கவனங்கள்
இப்படி எல்லாமோ. . ஏதேனுமோ. . நெருஞ்சி நட
பிறிதொரு நாளில் புகைமூட்டம் அன்றி மூடுபனி
உறுப்பு இயங்களை நெறிக்க உட்புகுந்து
நிலைக்கும் ஒற்றை நிறம்
பகலிலும் பிறந்த இமைகளின்
நடுவை கவ்விய இருள் போல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|