Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
கவனியுங்கள்
ஜீவன் பென்னி

யாருமற்ற வீதியில்
ஒரு போர்வை வியாபாரி தன்
சைக்கிளை உருட்டிச் செல்கிறார்
கிழவி ஒருவள் பூ விற்கிறாள்
சிலர் தள்ளிவிட்ட ஒரு வாகனம் விரைகிறது
சிறுமி ஒருவள் அழுகாமல் செல்கிறாள்
ஒரு மரத்திலிருந்த பூக்கள் சிதறிக்கிடக்கின்றன
ஒரு கிழட்டு நாய் கம்பியில் சிறுநீர் கழிக்கிறது
ஒரு பூனை தெருவைக் கடக்கிறது
வீட்டுக் கூரையில் ஒரு காகம் கரைகிறது
தெருக்குழாயில் தண்ணீர் வரப்போவதற்கான
காற்று வருகிறது
எங்கிருந்தோவொரு தொலைபேசி மணி கேட்கிறது
இன்னும்...
யார் சொன்னது
யாருமற்ற வீதியென்று!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.