Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
தேசிய நீரோட்டத்தில் மாற்றுத்திறன் படைத்தோர்

எம்.ஐ. ஹபிபுல்லா
தமிழில்: வி. கீதா

ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி டிசம்பர் 3ஆம் தேதி மாற்றுத்திறன் படைத்தோருக்கான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. 1959 முதல் 1994 வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைதான் உலக ஊனமுற்றோர் தினமாக கடைபிடிக்கப்பட்டது.

Children ஊனமுற்ற மக்களின் பிரச்சனைகள் குறித்து, அரசு, சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்தத் தினம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. மாற்றுத்திறன் படைத்தோரும் தேசிய நீரோட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற உத்வேகத்தை இது ஏற்படுத்துகிறது. ஊனமுற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு தோள் கொடுப்போம் என்று சமுதாயம் உறுதியளிக்கும் வாய்ப்பையும் இத்தினம் வழங்குகிறது.

இந்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன. இந்த நாளில் ஊனமுற்றோர் பங்கேற்பதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் ஏற்பாடு செய்கின்றன. மாற்றுத்திறன் படைத்தோரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கும், சிறப்பாக செயலாற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கும் தேசிய மற்றும் மாநில விருதுகள் இந்நாளில் வழங்கப்படுகின்றன.

ஊனமுற்றோரின் பிரச்சனைகளை உணர்ந்த மத்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களில் அவர்களின் நலனுக்காக பல திட்டங்களைச் சேர்த்துள்ளது. ஆண்டுதோறும் இந்நலத் திட்டங்களுக்கான செலவீனம் அதிகரித்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 41 மற்றும் 46 ஆவது பிரிவுகள் ஊனமுற்ற சமுதாயத்தின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. பார்வைத் திறனற்றவர், கை கால் ஊனமுற்றோர், கேட்கும் திறன் இழந்தவர், மனவளம் குன்றியவர், தொழுநோய் தாக்கி குணமானவர் என்று ஊனமுற்றோர்கள் ஐந்து பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றனர். நமது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் ஊனமுற்றோரின் தற்போதைய எண்ணிக்கை பத்து கோடியாகும்.

ஊனமுற்றவர்கள் எந்த ஒரு செயலையும் சவாலாகவே எடுத்துக் கொள்கின்றனர். இதனால் இந்திய அரசு இவர்களை ‘மாற்றுத் திறன் படைத்தவர்கள்’என்று அழைக்கத் துவங்கியது.

இந்த முயற்சி வெற்றி பெற்றதால் இத்தகைய அலுவலகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது 25 அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாவது முயற்சியாக, இந்திய அரசு நமது நாட்டின் முக்கிய நகரங்களில் 18 தொழிற்பயிற்சி மறுவாழ்வு மையங்களை அமைத்தது. ஊனமுற்றோரின் தொழில் திறனை மதிப்பீடு செய்து இந்த மையங்கள் பயிற்சி அளிக்கின்றன. இந்த 18 மையங்களில் பாட்னாவிலும், பரோடாவிலும் உள்ள மையங்கள் ஊனமுற்ற பெண்களுக்கென அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தேசிய அளவிலான வசதிகளை உருவாக்குவதற்காக நான்கு தேசிய நிறுவனங்களை நிறுவியுள்ளது. உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள டேராடுனில் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கான தேசிய நிறுவனம், மேற்கு வங்காளம் கல்கத்தாவில் கை, கால் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம், மும்பையில் கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கான ‘அலி யாவர் ஜங்’ தேசிய நிறுவனம், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் மனவளம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றை அரசு அமைத்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுடையோர்களுக்காக சென்னை முத்துக்காட்டில் தேசிய நிறுவனத்தை அமைக்க மத்திய சமூக நீதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஊனமுற்ற சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் வாயிலாக கணிசமான வசதிகளை அளித்து வருகிறது. 1977ஆம் ஆண்டு முதல் குரூப் சி மற்றும் டி பதவிகளில் மூன்று சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கண்பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு சதவீதமும், வாய் பேச இயலாத, கேட்கும் திறனற்றவர்களுக்கு ஒரு சதவீதமும், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஒரு சதவீதமும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதே கொள்கையை கடைபிடித்து வருகின்றன.

குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் ஊனமுற்றவர்களுக்கு வயது வரம்பில் பத்து ஆண்டுகள் வரை சலுகை உண்டு. தனது ஊனத்தினால் ஒரு நபர் தட்டச்சு செய்ய இயலாவிட்டால் அவருக்கு தட்டச்சு தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய தொலைத் தொடர்புத்துறை, சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான ஊனமுற்றவர்கள் தொலைபேசி நிலையங்களை நடத்தி, வருவாய் ஈட்டுகின்றனர். பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக, ‘பிரேய்லி’முறையில் எழுதப்படும் கடிதங்களுக்கு அஞ்சல்தலை ஒட்டுவதிலிருந்து தகவல் தொடர்பு அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் நாற்காலிகளில் வயர் பின்னும் பணி பார்வையற்றவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் டீலர்ஷிப்புகள், ஏஜென்சிகளில் 15 விழுக்காட்டை ஊனமுற்றவர்களுக்கு ஒதுக்குகிறது. ஊனமுற்றவர்கள் சுய தொழில் செய்வதற்கு, ரூ.6,500 வரை எந்த பிணையும் இல்லாமல் நான்கு சதவீத வட்டி விகிதத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி பெறலாம். நிதியமைச்சகத்தின் இந்த ஏற்பாடு மாற்றுத் திறன்படைத்தோர் வருவாய் ஈட்டுவதற்கு பெரிதும் உதவுகிறது.

மத்திய சமூக நீதி அமைச்சகம் அண்மையில், மாற்றுத்திறன் படைத்தோரின் வளர்ச்சிக்காக தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கியுள்ளது. வேலையில்லாத ஊனமுற்ற நபர்கள் சுயதொழில் துவங்குவதற்கு உதவுவதற்கென்றே இந்த கழகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் படைத்தோர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் இந்த கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com