ஹைபுன்கள்
அன்பாதவன்
உனது நகரத்தில் எழுகிறது பேரோசை
வெடித்த குண்டுகளில் நகரெங்கும் பீதிப்புகை
சிதறிய சதைத் துண்டங்களில் கருகல் நாற்றம்
மிக வருத்தத்துடன் தானிதை செய்ய நேர்ந்தது
சற்று யோசி
‘ஒரு நாயைக் கொல்வதாயினும்
விசாரித்து தான் கொல்வோம்’
பெருமையில் சிறுமாந்தவர்களின்
போர் விமானங்கள் எமது தேசத்தில்
தூவியது பூக்களையா... ?
எமது எண்ணெய் வயல்களை
அன்னை நிலங்களை சிதறடித்த
உனது ஏவுகணைகளில் இருந்ததென்ன
கனிவும் அன்பும் கருணையுமா?
பயங்கரவாதிகளென எம்மை
முத்திரைக் குத்துமுன்
பாருன் கோரமுகத்தை கண்ணாடியில்
அடுத்த வெடிப்பை புலனாய்வதற்குள்
நினைவில் கொள் ஒன்றை:
‘எதிரிகளே எமது ஆயுதத்தை தீர்மானிக்கிறார்கள்’
மருத்துவ மனைகளிலா பதுங்கு குழிகள்
பார்வையற்ற
வான் தாக்குதல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|