Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
நூல் அறிமுகம்
“அற்புத உலகில் ஆலிஸ்” - அபத்த நகைப்பொலியின் ஊற்று
இரா.நடராசன்


படமே இல்லாத புத்தகங்களை யார் தான் விரும்புவார்கள், நமது குழந்தை பருவத்தில் அழகான படம் போட்ட புத்தகம், பெரிய படம் போட்ட நோட்டு, ஓவியம் தீட்டப்பட்ட பலூன், வண்ணம் பூசப்பட்ட சாப்பாட்டுக்கூடை ஆகியவைகளுக்கு இருந்த மவுசு மறக்கமுடியாத ஒன்று அல்லவா? ஏராளமான படங்களோடு தனது “அற்புத உலகில் ஆலிஸ்’’ நாவலை 1866ல் லூயிஸ் கரோல் வெளி-யிட்டபோது அது 20 மொழிகளில் மொழி-பெயர்ப்பாகுமென்றோ லட்சக்கணக்கான சிறுவர் சிறுமியரை சென்றடையும் என்றோ அவர் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். கொஞ்சம் கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் முட்டாள்தனம் ஏராளமான ஆச்சரியங்கள். இதுவே அற்புத உலகில் ஆலிஸ் லூயிஸ் நாவல். பள்ளிக்கூடம் எனும் பல்சக்கர அமைப்பினால் திருகி எறியப்படும் குழந்தைகளுக்கு இதைத்தவிர வேறு என்ன வேண்டும். மண்ணிற்கு அடியில் சிறு முயல் பொந்தின் வழியே உள்ளே விழுந்துவிட்டு, ஆலிஸ் உலக குழந்தைகளை தன்னோடு குதூகலமும் மர்மமும் நிறைந்த அற்புத உலகினுள் அழைத்துச்சென்ற போது, வெள்ளைமுயல் முதல் டொடொ பறவை, நண்டு, பாசாங்கு ஆமை, வழி சொல்லும் புழு, கதை சொல்லும் எலி, குட்டி இளவரசகர்களான குழந்தை-களுக்கு ஒரு வன ராஜ்ஜியமே உருவாகி இருந்தது.

Alice Wonder Land ஆலிஸ்ஸின் வெப்பம் தகிக்கும் ஞாயிறு பொழுதின் மயக்கமும், அவளது முதிய சகோதரியின் ஓவியங்களற்ற புத்தகமும் தரும் எரிச்சல் எதையாவது அந்த மரப்புதர்களை தேடிடவைத்த மதியம் கோட்டும் சூட்டும் அணிந்த செல்வந்தமுயல், ஹார்டின் ராணியின் விருந்துக்கு செல்ல பரபரப்போடு ஓடுவதை கண்டு பின்தொடர வைத்து பாதாள உலகில் முயலை தொடர்ந்து சென்று உயரத்திலிருந்து விழு விழு நாவல் தொடங்குகிறது. வெள்ளை முயல் எங்கோ கதவில் மறைந்துவிட அங்கிருந்த அழகிய பங்களா-வில் தோட்டத்தில் நுழைய ஆலிஸ் உடலை சிறிதாக்க வேண்டும். குழந்தைகள் உலகம் விசித்திரமானது. அங்கே நினைத்தால் மழை, யோசித்தால் காடு, ஒரு நொடி கஷ்டம் என்றால் காப்பாற்ற தேவதை, எனவே ஒரு மேசை அதில் ஒரு குவளை சாறு. சாறு குடித்ததும் குட்டியாகும் ஆலிஸ். கேக் தின்றதும் பூதாகரமாய் பெரிதாகும் ஆலிஸ்... என்று விசித்தி-ரங்களை உண்மை தன்மையோடு எழுதிச்செல்லும் லூயிஸ் கரோல் உண்மையில் ஒரு எழுத்தாளர் அல்ல. அவரது பெயர் லூயிஸ் கரோலும் அல்ல!

1832 ல் இங்கிலாந்தின் யார்க் ஷெர் மாகாணத்தில் பிறந்த சார்லஸ் லுட்விக் டாட்சன் தான் பின்னாட்களில் லூயிஸ்கரோலாக அறியப்பட்டார். அவரது குடும்பத் ராணுவ தளபதிகளையோ அல்லது தேவாலய குருக்கள் களையோ பரம்பரை பரம்பரை-யாக படைத்திருந்தது. பெரிய பணக்கார குடும்பம். ஆனால் டாட்சன் பிறப்பிலிருந்தே தனிமை விரும்பி-யாகவே இருந்தார். ஆக்ஸ்போர்டின் ரக்பி பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர் ஆரம்பமுதலே கணித பாடத்தில் படு சுட்டியாக இருந்தார். பின்னாட்களில் கணிதத்தில் அதிசயிக்கத்தக்க திறன்களை பெற்றவராக ஆக்ஸ்போர்டின் பிரதான கணிதப் பேராசிரியர்களில் ஒருவராய் நியமிக்கப்பட்டு இறக்கும் வரை இப்பதவியில் நீடித்தார். நெடிதுயர்ந்த தேகம், வளைந்த முதுகு அற்புத உலகில் ஆலிஸ் நாவலில் வரும் மந்திரத் தொப்பி செய்து விற்கும் வியாபாரி-யான (Mad hatter) பாத்திரம் அவரை மாதிரியேதான் இருக்கிறான். பள்ளியில் சந்தோஷங்கள் அற்றவர். தனிமையும் துயரமுமாய் கழித்தவர். ஆக்ஸ்போர்டின் கிரைஸ்ட் கல்லூரியில் படித்த காலத்தில் அதன் நூலகத்தால் ஈர்க்கப்பட்டார்.

ஆலிஸ் தான்விட்ட கண்ணீர் ஒரு குளம் போல தேங்கிட அங்கே குளித்து கரையேறும் எலி. டொடொ பறவை, பருந்து குட்டி என பலரோடு உரையாடுவார். தனது செல்லப்பூனை தீனாவைப்பற்றி சொன்ன மாத்திரத்தில் தன்னை எலி வெறுப்பதை கண்டு வருந்துகிறாள். டொடொ பறவை தாங்கள் அனைவருமே நனைந்துவிட்டதால் அதை உலர்த்த வழி தேடுகிறது... அந்த வழிதான் காகஸ் பந்தையம். அனைவருமாக அனைத்து திசையிலும் ஓடிவிட்டு திரும்பும் ஓர் அபத்த பந்தையம் அது. இறுதியில் யார் ஜெயித்தார்கள் என்றால்... எல்லாரும்தான். அனைவருக்கும் ஆலிஸ் பரிசாக தன் இனிப்பு வில்லைகள் தருவார். அவளுக்கும் பரிசு வழங்கப்படும். யாரும் தோற்கமுடியாத ஒரு பந்தயம். அனைவருமே பரிசு பெறும் ஒரு சம்பவம். சிறுவர் சிறுமியர் மனம் விட்டு சிரிக்காமல் இருக்க முடியாது. வெள்ளை முயலின் பங்களாவிற்குள் குட்டி உருவத்தில் நுழையும் ஆலிஸ் உள்ளே போன பிறகு... முயல் அவளை தனது வேலைக்கார சிறுமி மேரி ஆன் என நினைத்து கை உறையும், விசிறியும் கொண்டு வர பணிக்கிறது. ஓடும் ஆலிஸ் உறை அணிந்த கையோடு வீட்டிற்குள் உப்பி பழைய உருவடையும் போது வீடே அதிர, கூரையை இடித்தபடி சன்னல் வழியே விரல்கள் பிதுங்கி வெளிவர, காட்சி அளிப்பதை கற்பனை செய்து கொண்டு குழந்தைகள் வயிறு வலிக்க சிரிப்பதை நாவலெங்கும் கேட்கிறோம்.

சிறு வயதிலிருந்தே கவிதைகள், கதைகள் எழுதி வந்த சார்லஸ் லிட்விக் 1854ல் காமிக் டைம்ஸ் இதழில் சில குழந்தை சித்திரங்கள் வரைந்தும் பாடல்கள் புனைந்தெழுதியும் இலக்கிய உலகிற்குள் பிரவேசம் செய்தார். தி டிரெயின் இதழுக்காக 1856ல் எழுதிய படைப்புகளுக்காக லுட்விக்கின் கிரேக்க மொழி வடிவமான லூயிஸ்; சார்லஸின் லத்தீன் வடிவமான கரோலஸ் (கரோல்) இரண்டையும் இணைத்து லுயிஸ் திருமணமே செய்து கொள்ள-வில்லை. ஒரு கணிதப் பேராசிரியாகவும், புதிய கண்டுபிடிப்பாளராகவும் தான் முதலில் அறியப்பட்டார். இப்போது காவல்துறை பயன்படுத்தி வரும் பொய் சொன்னால் கண்டுபிடிக்கும் லை_டிடெக்டர் கருவி அவரது கண்டுபிடிப்பு. அதைத்தவிர வார்த்தை விளையாட்டு ஏணி, கடித தபால் தலை அடுக்கும் புதிர் கருவி, ஆகியவற்றோடு குழந்தைகளை கணிதத்தோடு இணைக்கும் பல விளையாட்டுக்களை லூயிஸ் கண்டுபிடித்தார். அநாயசமான கற்பனை வளத்தை நிரப்பி உருவாக்கிய சாகாவரம் பெற்ற காவியமே “அற்புத உலகில் ஆலிஸ்’’.

ஒரு வழியாக வெள்ளை முயல் பங்களாவிலிருந்து தப்பிய ஆலிஸ் மிகவும் குட்டியான உருவத்தில் காளான் மீது அமர்ந்து சாவகாசமாய் ஹ¨க்கா புகைக்கும் பட்டுப்புழுவை சந்திக்கிறாள் ஆலிஸ். தான் தனது அபாய உருவத்தை அடைய விரும்பு-வதாக அவள் கெஞ்சுவாள். பட்டுப்புழு காளானை இரண்டாக பிரித்து ஒரு பக்கத்தை உண்டால் குட்டியாகவும் மறுபக்கத்தை மென்றால் பெரிதாகவும் ஆகலாம் என்று கூறிவிட்டு இலைகளுக்கு அடியில் சென்று மறைந்து விடுகிறது. பரிட்சித்துப் பார்க்க முதலில் வலக்கை பாகத்தை உண்ணும் ஆலிஸ் கழுத்து மட்டும் நீண்டு விண்ணளவு உயரமாகிறாள். புறா ஒன்று முகத்தை வந்து கொத்துகிறது. “முட்டை திருடி பாம்பு’’ என்று திட்டுகிறது. அதேபோல மிளகாய் பொடி தின்று திணறும் பன்றிக்குட்டியை குழந்தையாக தன்னிடம் ஒப்படைத்துவிட்டு ஹார்டின் ராணியின் விருந்தில் இசைக்கருவி வாசிக்க ஓடும் ராணியின் மந்திர குமாரியோடான சந்திப்பும், அங்கே வசிக்கும் செஷைர் பூனையின் தொடர்பும் அபூர்வ சித்திரிப்பு ஆகும். செஷைர்பூனை நினைத்த-போது நினைத்த இடத்தில் தோன்றி மறையும் தன்மையாக இருப்பதை காண்கிறோம். ஹார்டின் ராணியின் பந்தாட்ட மைதானமும், மட்டையாக நீள கழுத்து கொக்கும் பந்தாக சுருண்டுறங்கும் கீறியும் உபயோகமாவதும் கற்பனை இயலின் (Fantacy) அபத்த நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஆலிஸ்ஸின் கதையை எழுதிட லூயிஸ் கரோல் முடிவு செய்ததும் அதை நடைமுறைப்படுத்தியதும் தனி கதை. 1856ல் ஹென்றி லைடல் என்பவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய பொறுப்-பாளராக (Dean) பதவியேற்றார். அவரது மனைவி லோரினாவிற்கு லூயிஸ் கரோல் நெருங்கிய தோழராக அவர்களது மூன்று பெண் குழந்தைகளான லூரினா எடித் மற்றும் ஆலிஸ் டைலுக்கு நெருக்கமானவராகி தினமும் தனது ஓய்வுப் பொழுதையெல்லாம் அவர்க-ளோடு புதிராடி களிக்கிறார். தர்க்கத்தைப் பற்றியும் கணிதம் பற்றியும் ஆய்வுரை நிகழ்த்திவிட்டு அவர் திரும்பிய 1865 ஜூலை 4 அன்று சுற்றுலா செல்ல லோரினா முடிவெடுக்க குழந்தைகளோடு லூயிஸ்-கரோலும் இணைந்து கொண்டார். நண்பர் கெனான் ராபின்சன் டக்வொர்த் என்பவரும் உடன் சென்றார். கதை ஒன்றை குழந்தைகளுக்கு சொல்லத் தொடங்கிய லூயிஸ் கதையில் 11வயது ஆலிஸ்ஸையே ஒரு பிரதான பாத்திரமாக்கிட அபத்தங்களும், கற்பனை விஷயங்களும், விசித்திர சம்பவங்களுமடங்கிய எங்குமில்லா ஒரு பேரரசு அன்று பிறந்தது.

பன்றிகுட்டி வளர்ப்பையும், மிளகாய்தூள் சமையலறையையும் கடக்கும் ஆலிஸ் ஒரு பயித்தியக்-காரத்தனமாக தேநீர் விருந்தில் மறைகழண்ட தொப்பித்தலையணையும் (Mad hatter) மார்ச் என்றே வருடம் முழுவதையும் நம்பும் முட்டாள் “மார்ச் வன முயலை’யும் சந்திக்கும் இடம் வார்த்தை விளையாட்டு-களாலும் அபத்த நகைப்பின் உச்சமுமாய் இருப்பதை காணலாம். தொப்பி தலையனின் கடிகாரம் காலை ஆறு மணி என நின்று போனதால் அவன் தேநீர் அருந்திக்கொண்டே இருப்பதை நிறுத்தமுடிய-வில்லை. வருடம் முழுவதுமே மார்ச் ஆகும்படி வனமுயலின் கடிகாரம் நின்று போகிறது. முள்ளம்-பன்றி உறங்கி உறங்கி எழுந்தபடி கதை சொல்ல முயல ஆலிஸ் அபத்த உரையாடலில் சிக்குவான். உறங்கும்போது சுவாசிக்கிறேன் என்பதும் சுவாசிக்கும் போது உறங்குகிறேன் என்பதும் ஒன்றல்ல எனத் தொடங்கி நான் உண்பதை பார்க்கிறேன் என்பதும் நான் பார்ப்பதை உண்கிறேன் என்பதும் ஒன்றல்ல எனத் தொடர்ந்து வரும் வாசகங்கள் குறித்த விளையாட்டை உலகெங்கும் குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள். அதே போல பாசாங்குகார ஆமைதான் கடலில் கல்விகற்றதாகவும் தனக்கு பாடம் நடத்திய கடலாமை குறித்தும் கற்ற பாடங்கள் குறித்தும் அழுது கண்ணீர் விட்டபடியே சிரிப்பை அடக்கவே முடியாத பல விஷயங்களை சொல்வதை ஆலிஸ் கேட்கிறாள்.

கிணற்று தவளைகளின் ஓவிய வகுப்பு குறித்த உ¬யாடலும் லூயிஸ் கரோலின் அபத்த நகைச்-சுவைக்கு மேலும் ஒரு சான்று. சீட்டுக்கட்டிலிருந்து பிரிந்த ஹார்டின் ராணியும் ராஜாவும் வைக்கும் விருந்தும், விளையாட்டும் பின் தொடரும் வழக்குமன்ற காட்சியும் நம்மை திகைக்க வைக்கின்றன. ராணி நடச்சொன்ன சிவப்பு ரோஜாச் செடிகள் இடம்மாறி விட்டபடியால் வெள்ளை ரோஜாக்-களின் மீது சிவப்பு சாயம் பூசிடும் தோட்டக்காரர்-களின் தலை கொய்யப்படாமல் ஆலிஸ் காப்பாற்-றுவதும், ஹார்டின் ராஜா அதன் தலையை வெட்டச் சொல்லும்போது தலை மட்டும் இருக்க உடம்பை மறைத்து வைத்து பூனை டிமிக்கி அடிப்பதும் சிறுவர் நாவலுக்கே உரிய பதிவுகள் ஆகும்.

லூயிஸ் கரோல் ஒரு பேராசிரியராக இருந்து மிகவும் கஷ்டப்பட்டவர். அதனாலேயே திருமணம் செய்து கொள்ளவில்லையென்பது பின்னாட்களில் அவரது வாழ்வை கதையாக்கியவர்களின் கருத்தாகும். டொடொ பறவை பாத்திரம் “அற்புத உலகில் ஆலிஸ்’’ நாவலில் திக்குவாய் பறவை. தனது பெயரின் ஒரு பகுதியான டொவை மட்டுமே உச்சரிக்கும். அது மறு பாதியான மற்றொரு டொவை உச்சரிக்க திணறும்போது எல்லோரும் சிரிப்பார்கள். ஆலிஸ் அவர்களை ஆத்திரத்தோடு அடக்குவாள். அதே போல இறுதியில் நீதிமன்றத்திற்கு வரும் ஆலிஸின் உருவம் அனைவரையும் நடுங்கவைக்க, பயத்தில் ரொட்டியை குடித்து டீக்குவளையை, தொப்பித் தலையன் மென்று திண்ணும்போது அங்கே வார்த்தை-களே வராமல் தடுமாறும் சமையற்காரணும் கூட ஏதோ ஒரு வகையில் யாரிடமும் பேசாத குழந்தைகள் தவிர எல்லாரையும் பார்த்து பயந்து லூயிஸ் கரோலின் உண்மையான ரூபத்தை வெளிப்படுத்து-பவர்களாக இருக்கிறார்கள். என்னதான் கதையை ஆலிஸ்லைடாலின் நச்சரிப்பு தாங்காமல் லூயிஸ் எழுதி நோட்டு புத்தகமாகவே தான் வைத்திருந்தாலும் தயங்கியபடியே நண்பர் ஜார்ஜ் மக்டொனால்டிடம் தர அவர் தனது குழந்தைகளுக்கு வாசிக்கத் தருகிறார். அவர்கள் அடைந்த குதூகலத்தை கண்டு வியந்து ஒரு புத்தகமாக அதை கொண்டு வந்து, உலகின் சிறுவர் இலக்கிய நிரந்தர பொக்கிஷமாக்கினார் மக்டொனால்டு.

ஆலிஸ் ஏற்படுத்திய அலையால் மிகவும் அதிக கவனிப்பை பெற்ற லூயிஸ் கரோல், தெரியும் கண்ணாடி வழியே (Through the looking glass) என்று அதன் தொடர்ச்சியை எழுதி பிறகு நிரந்தர-மாக கணக்கின் பக்கம் சென்று 1898ல் ஜனவரி 14 அன்று காலமானார். அவர் இருந்த வீடு தேவாலய-மாக்கப்பட்டு இப்போது, ஆலிஸ், வெள்ளை முயல், டொடொ, தொப்பித்தலையன் என சாகாவரம் பெற்ற பாத்திரங்களின் வாழ்உயர சிலைகளோடு குழந்தை-களின் குதூகலப் பொழுதுபோக்கு பூங்காவாக்கப்-பட்டுள்ளதோடு, ஆலிஸின் கதை பைபிளை விட அதிக மொழிகளையும் அடைந்துள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com