Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
மே தினம்
உழைப்பாளிகளின் உன்னதத் திருநாள்


பரந்து விரிந்த இவ்வுலகில் பல்வேறு மொழி, மதம், இனம், பண்பாட்டை உடைய மக்கள் வாழ்கிறோம். ஒவ்வொரு நாட்டினரும், மதத்தினரும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின் றோம். உழைக்கும் மக்கள் எந்த நாட்டில் வசித்தாலும், எந்த மொழியைப் பேசினா லும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் எவ்வித வேறுபாடும் இன்றி அவர்கள் அனைவரும் கொண்டாடும் தினமாக ‘தொழிலாளர்கள் தினம்’ மட்டுமே உள்ளது.

‘அதிகாலை முதல் அந்தி சாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலை நாளாக இருந்தது. சில தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள். அவர்கள் குறைந்த வேலை நேரத்திற்காக நடத்திய போராட்டம் மே தினம் உருவாவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதிக ஊதியம் வேண்டுமென்பதற்காகவும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் ‘மே முதல் நாள்’ வேலை நிறுத்தங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. அப்போது இடதுசாரித் தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது.

மே தின வேலை நிறுத்தங்கள் உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்றன. ஜனநாயகத்தைப் பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும், ஒடுக்கு முறையும் அற்ற சோஷலிஸ உலகை நிர்மாணிக்கப் பாதை வகுக்கவும், தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.

உழைப்பாளி மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு மே முதல் நாளன்று தொழிலாளர் தினம் உலகிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல போராட்டங்களால் தொழிலாளர்களின் வேலை 8 மணி நேரமாக்கப்பட்டது. ஆனால் இப்போதிருக்கின்ற முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை மீண்டும் 10 மணி நேரமாகவும், 12 மணி நேரமாகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இது முதலாளித்துவத்தின் தோல்வியை வெளிச்சமாக்கியுள்ளது. தற்போது தொழிலாளிகள் பல வகைகளில் சுரண்டப்பட்டு வருகின்றனர். இத்தகைய பல பிரச்சனைகளி லிருந்து தொழிலாளர்களை மீட்கப் போராடும் வகையில் இந்த மே தினம் அமையும்.

ச.செ. பிரதிவி
பத்தாம் வகுப்பு, மிஙிணிகி உயர்நிலைப்பள்ளி
குறிச்சி, பட்டுக்கோட்டை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com