Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
புத்தகம் திறக்கும் வாசல்
சில்வியா பிளாத் சில நினைவுகள்
கிருஷ்ணா டாவின்சி


சில தினங்களுக்கு முன்னால் தினசரிகளில் வெளியான ஒரு சின்னச் செய்தியை நீங்கள் படித்திருக்கலாம். நிகோலஸ் பிளாத் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. அவருடைய தாயார் யார் என்பதைப் பற்றியும் அந்தச் செய்தியில் ஒரு சிறுகுறிப்பு இருந்தது. அவர் பெயர் சில்வியா பிளாத். உலகப்புகழ் பெற்ற கவிதாயினி. அவருடைய கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இதுதான். “கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நடுவிலும் தங்கத் தாமரையை நட்டு வைக்க முடியும்”.

Sylvia Plath இருபதாம் நூற்றாண்டின் மிக உன்னதமான கவிஞர்களில் ஒருவரான சில்வியா பிளாத்தின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த வாசகமே சில்வியாவின் வலி மிகுந்த வாழ்க்கையைச் சுருக்க-மாகச் சொல்கிறது.. அவருடைய மகனின் இன்றைய தற்கொலை வரை அந்தக் காயங்கள் தொடர்கின்றன.

வாழ்நாள் முழுவதும் மனச் சிக்கல்களாலும் தற்கொலை எண்ணங்களாலும் துரத்தப்பட்ட மனம் சில்வியாவினுடையது. இவருடைய நாவலான ‘த பெல் ஜார்’ மனப் போராட்டங்கள் பற்றியும் தற்கொலை முயற்சிகள் பற்றியும் எழுதப்பட்டிருந்த-தால் அதை ஒரு வகையில் சில்வியாவின் சுயசரிதை என்றும் சொல்லலாம்.

எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க வாய்க்கிற மனம் அபூர்வமானது. இந்த விஷயத்தில் சில்வியா ஒரு துரதிருஷ்டமான ஜீவன். 1937 அக்டோபர் 27ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள மாசச்சூட்டிஸில் பிறந்தார் சில்வியா. தந்தை ஓட்டோ எமிலி பிளாத் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அம்மா ஆரேலியா ஷோபர் பிளாத் கணவரை விட 21 வயது இளையவர். ஓட்டோவிடம் மாணவியாக இருந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சில்வியாவின் குழந்தைப் பருவம் மசாச்சூசெட்டி-ஸில்தான் பெரும்பாலும் கழிந்தது. சிறுமியாக இருந்த போதே கவிதைகளை எழுதத் தொடங்கினார். எட்டு வயதில் போஸ்டன் ஹெரால்ட் பத்திரிகையில் அவரது முதல் கவிதை வெளிவந்தது. அதே எட்டு வயதில்தான் தன் தந்தையையும் இழந்தார் சில்வியா. நுரையீரல் புற்றுநோயால் தாக்கப்பட்டு இறந்த நண்பரின் மரணத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டோ, தனக்கும் நண்பரைப் போலவே பிரச்சனைகள் இருப்பதை கண்டு பயத்திலேயே சிகிச்சை எடுக்க-வில்லை. ஆனால், அவரது சர்க்கரை நோய் முற்று-வதற்கு அவரது அச்சமே காரணமாகி பின் அதுவே அவரது மரணத்திற்கும் காரணமானது.

தந்தையின் மரணத்தால் கலங்கிப் போன சில்வியா எழுதிய ‘டாடி’ என்ற கவிதை ஓட்டோவின் கல்லறையை அலங்கரிக்கிறது. கடுமையான மனச்சிக்கல்களைக் கொண்டவர்கள் தேர்ந்த படைப்பாளியாகவும் இருப்பார்கள். இதை “பைபோலார் டிஸார்டர்” என்பார்கள் மருத்துவர்கள்.

சில்வியா பிளாத்தும் அப்படித்தான். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து எழுந்த மனச்சிக்கல் அடுத்தடுத்து இன்னும் அதிகமானது. கல்லூரிப் பருவமும், நியூயார்க் நகரத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் உகந்ததாக இல்லை. கல்லூரியில் நார்ட்டன் என்கிற ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகினார். அந்த நாட்கள் மட்டும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. ஆனால் விரைவில் அவருக்கும் டிபி நோய் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அது சில்வியாவை மீகவும் பாதித்தது. “மெட்மொஸேல்” என்கிற கல்லூரிப் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் அப்போது பணியாற்றினார் சில்வியா.

ஒருநாள் தன் வீட்டுக்கு வந்தவர், கட்டிலில் படுத்து ஏகப்பட்ட தூக்க மாத்திரைகளை விழுங்கினார். சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்-பட்டதால் காப்பாற்றப்பட்டார். ஆனாலும் தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. விரைவிலேயே அவர் மனநோய்க்கு ஆளாகி மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருடைய செலவுகளை எல்லாம் கவனித்தவர் ஆலிவ் ப்ரோட்டி என்கிற பெண்மணி. அவரும் மனநோய்க்காக சிகிச்சைப் பெற்றவர்தான். சில்வியாவின் இலக்கியத் திறன் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார் ப்ரோட்டி. சில்வியா சற்று குணமானதும் படிப்பில் கவனம் செலுத்தி பட்டப்படிப்பை முடித்தார்.

பிறகு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்று மேற்படிப்புக்காக அங்கே சென்றார். அங்குதான் அவர் அற்புதமான கவிதைகளை எழுதத் தொடங்கினார். “வர்சிட்டி” என்கிற கல்லூரிப் பத்திரிகையில் அவருடைய கவிதைகள் வெளிவந்து மாணவர்களிடையே பெரிய கவனிப்பைப் பெற்றது. அப்பொழுது ஆங்கிலக் கவிஞர் டெட் ஹ¤யூஸைச் சந்தித்த சில்வியா கண்டதும் காதல் கொண்டார். இருவருக்கும் விரைவிலேயே 1956ம் வருடம் திருமணமும் நடந்தது.

ஹ¤யூஸ¤ன் மீது பைத்தியமாகவே இருந்தார் சில்வியா. அவரது காதல் நாளுக்கு நாள் வலுப்-பெற்றே வந்தது. சில்வியாவின் இலக்கியப் படைப்பு-களும் அப்போது நிறைய வெளிவர ஆரம்பித்தன. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான “தி கொலாஸஸ்” வெளிவந்து மீகுந்த பாராட்டுகளைப் பெற்றது. சில்வியா கர்ப்பமானார். ஆனால் அது ஒரு சில மாதங்களில் கலைந்தது. மனம் தளர்ந்த சில்வியா மீண்டும் மனச்சிக்கல்களுக்கு உள்ளானார். அந்தப் பாதிப்புகளை அடிப்படையாக வைத்து காலத்துக்கும் அழியாத அற்புதமான கவிதைகளை அப்போது எழுதினார் சில்வியா பிளாத் ஃரீடா, நிக்கோலஸ் என்கிற இரு குழந்தைகள் பிறந்தன.

ஆனால் அதற்குப் பிறகுதான் சில்வியாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்ந்தது. அவர் இந்த உலகிலேயே மீகவும் நேசித்த காதல் கணவருக்கு அஸ¤யா என்கிற பெண்ணுடன் மீக உணர்ச்சி-பூர்வமான தொடர்பு இருந்தது அவருக்குத் தெரிய வந்தது. கணவர் ஹ¤யூஸ¤ம் அதற்காக எந்த வருத்தமும் தெரிவிக்காமல் அதை நியாயப்படுத்தியது சிந்தியாவின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடும் கோபத்தில் அவர் கணவரை விட்டுப் பிரிந்தார். தன் இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு லண்டனில் வேறொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். அது பிரபல கவிஞர் யேட்ஸ் ஒருகாலத்தில் வாழ்ந்த வீடு. அந்த நினைவு மட்டுமே சிந்தியாவுக்கு ஓரளவு அமைதி தந்தது. ஆனால் கணவரின் துரோகம் உள்மனதில் எரிமலையாக வெடித்துக் கொண்-டிருந்தது.

1963ம் வருடம் பிப்ரவரி 11ம் தேதி, சில்வியா நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்தார். தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்த தன் இரண்டுகுழந்தைகளின் மேல் ஈரத்துணியால் போர்த்தினார். அந்த அறையின் கதவைத் தாழிட்டு விட்டு, சமையலறைக்குச் சென்றார். அந்த அறையின் கதவையும் உட்புறமாகப் பூட்டினார். காஸ் அடுப்பை மூட்டி விட்டு தன் முகத்தை அந்த நெருப்பில் வைத்தார். உலகப் புகழ்பெற்ற அந்த மகத்தான கவிதாயினி நெருப்பில் கொஞ்சம் கொஞ்சமாக வெந்து போக ஆரம்பித்தார்..

இலக்கிய உலகையே உலுக்கிப் போட்டது அந்த தற்கொலை மரணம். அற்புதமான கவிதைகளுக்காகப் புலிட்ஸர் பரிசு வாங்கியவர் அவர். இறந்த பின்பும் அவர் எழுதியிருந்த ஏராளமான கவிதைகளைத் தேடி எடுத்துப் பிரசுரம் செய்தார் கணவர் ஹ¤யூஸ். சில்வியாவின் சொத்துக்களை எல்லாம் அவர் தன் பொறுப்பில் எடுத்துப் பராமரித்தது சில்வியாவின் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஹ¤யூஸ¤ன் ஆசை நாயகியாக இருந்த அஸ¤யாவும் குற்ற உணர்ச்சியின் உந்துதலில் தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது சில்வியா பிளாத்தின் மகனும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் செய்தி சில்வியாவின் துயரங்கள் இன்னும் தொடர்ந்தபடியே இருப்பதைத்தான் காட்டுகிறது. அதற்கு ஒரே ஆறுதல் அவருடைய என்றும் அழியாதக் கவிதைகள்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com