Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
உலக சினிமா வரலாறு 12
மறுமலர்ச்சி யுகம் - இரண்டாம் உலகப்போரில் சினிமா
அஜயன் பாலா


நம் இருப்பை, மனிதனின் நாகரீகத்தை பண்பாட்டு வளர்ச்சியை கேலி செய்யும் விதமாக போரின் அவலங்களை நாள்தோறும் ஊடகங்களின் வாயிலாக காண்கிறோம். ஒரு மனிதன் தன் கைவாளால் ஒரு நேரத்தில் ஒருவனை கொன்ற காலம் போய் அதே ஒருவனால் இன்று எத்தனை பேரை கொன்று குவிக்க முடியும் என்ற சவாலாக மனித குலத்தின் நாகரீக வளர்ச்சி மாறிவருவது பெரும் துயரமான, வெட்க-கேடான விஷயம்.

கொத்து குண்டுகள், ரசாயன ஆயுதங்கள், உயிரியல் பயங்கராயுதங்கள் என மனித முகம் நாளுக்குநாள் விகாராமாகிக்கொண்டே போகிறது. இதுவரை மனித குலம் கண்ட பேரழிவுகளில் இரண்டாம் உலகப் போரே இன்று வரை முதலிடம் வகிக்கிறது.

காலங்களினூடே இரண்டாம் உலகப் போர் எனும் பெரும் நரக வாகனம் கடந்து சென்றதன் பலனாக அதன் ரத்தம் தோய்ந்த வழிதடத்தில் 48 மீல்லியன் மனித உயிர்கள் பலியாகின.

கிட்டதட்ட 18 மீல்லியன் மக்கள் தம் சொந்த பந்தங்களை இழந்து நாடற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் மாறினர். கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நகரங்களிலும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது. குடியிருப்புகள் சிதிலமாயின; வனங்கள் பறவைகள், மீருகங்கள் ஆகியவற்றின் இயல்பு வாழ்க்கை தொலைந்து போயின.

சோவியத் யூனியனின் மனித புழக்கத்துக்கு ஆட்படாத மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 40 சதவீதம் இறந்தவர்களின் முகாம்களாக மாறியது. போலந்து நாட்டின் 25 சதவீத மக்கள் வதை முகாம்-களில் அடைக்கப்பட்டனர். இரண்டாம் உலகபோரின் சீரழிவுகளில் பெரும்பான்மை ஹ¤ட்லரின் நாஜ¤ படைகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இன்று உலக சினிமாவின் சரித்திரங்களை புரட்டி பார்க்கிறபோது மனிதநேயத்தை வலியுறுத்தும் பல படங்கள் இக்காலக்கட்டத்தை சித்தரிப்பதாகவே இருக்கின்றன. தி கிரேட் டிக்டேட்டர், தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய், லைப் இஸ் பியூட்டிஃபுல், பிளாட்டுன், ஷ¤ண்ட்லர்ஸ் லிஸ்ட் மற்றும் பியனிஸ்ட் போன்ற படங்கள் அவற்றுள் சில.

உலகின் தலைசிறந்த நூறு படங்கள் என பட்டியலிட்டால் அவற்றுள் குறைந்தது இருபது படங்கள் இந்த இரண்டாம் உலகப்போரின் அவலத்தை சித்தரிப்பதாகவே அமையும். அப்படிப்-பட்ட சூழலில் சினிமாவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வார்த்தைகள் தேவை-யில்லை. ஆனாலும் போருக்கு பின் இத்தாலிய சினிமாவின் எழுச்சியை கட்டியம் கூறுவதாக போர் நடக்கும் துவக்க காலங்களிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாறுதல்கள் தோன்ற துவங்-கின. இந்த மாற்றத்துக்கு இத்தாலியின் சர்வாதி-காரியான முசோலினியும் ஒரு விதத்தில் காரணம் ஆவார்.

முன்னால் சோஷலிஸ்ட்டான முசோலினி சினிமாவை மீகவும் காலதாமதமாகத்தான் புரிந்து கொண்டார். சினிமாவை குறித்து லெனின் சொன்ன ”மீகச்சிறந்த ஆயுதம்’’ எனும் சொற்றொடர் தான் அவருக்கு சினிமாவின் மீதான புரிதலை வளர்த்துக்-கொள்ள மீகவும் தூண்டுதலாக இருந்தது.

1924ல் முசோலினி இத்தாலியை குறித்த செய்தி மற்றும் ஆவணப்படங்களை எடுப்பதற்காக லுசி எனும் சினிமாவுக்கான அரசு பள்ளி ஒன்றை நிறுவி-னார். 1935ல் இத்தாலியின் அனைத்து செயல்பாடு-களையும் தன் சர்வாதிகார குடை எனும் ஒற்றை அதிகாரத்துக்குள் கொண்டு வந்த முசோலினி சினிமாவையும் அது போல் அரசு கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தார்.

600,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஜெர்மனியின் யு.எப்.ஏ.வுக்கு நிகரான ஸ்டுடியோ ஒன்றை நிறுவிய முசோலினி அதற்கு சினி சிட்டா ஸ்டுடியோஸ் என பெயரும் சூட்டினார். உடன் திரைப்படம் குறித்த பள்ளியையும் புனரமைத்தார். 1937ல் ரோமாபுரி நகரம் உருவானதாக கருதப்படும் ரோமீன் புனித நாளான ஏப்ரல் 21ம் நாள் இந்த பிரம்மாண்ட ஸ்டுடியோவை திறந்தார்.

அடுத்த ஒரு வருடத்தில் இந்த ஸ்டுடியோ மொத்தம் 81 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வழக்கமாக இத்தாலியில் உருவாகும் படங்களின் எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்கு கூடுதலாகும்.

இக்காலத்தில் அந்த பள்ளியில் சேர்ந்த சில மாணவர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியபடி வளர்ந்தனர், இளம் இயக்குன-ரான லூகி சியாரனி றீuரீலீவீ நீலீவீணீக்ஷீணீஸீஸீவீயால், சினிமா குறித்த அவரது பார்வைகளால் வசீகரம் கொண்ட அந்த இளைஞர்கள் மீகவும் உற்சாகமும் புத்தெழுச்-சியும் புதுமை விரும்பிகளாகவும் இருந்தனர்.

ரோபர்ட்டோ ரோஸலினி, மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டனியோனி போன்ற அந்த மாணவர்களால் தான் பின்னாளில் இத்தாலி உலக சினிமாவில் மீகப்பெரிய மாறுதலை செய்ய போகிறது என்பதை அந்த மாணவர்களும், ஆசிரியரும் முசோலினியே கூட அறிந்திருக்கவில்லை. இவர்கள் சினிமா குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், அறிவை பெருக்கவும் ஒரு இதழ் ஒன்றை துவக்கினர். அதன் பெயர் ப்ளாக் அண்ட் ஒயிட்.

இக்காலத்தில் இந்த பத்திரிக்கைக்கு போட்டியாக இன்னொரு இதழ் வந்தது. சினிமா எனும் தலைப்பில் வெளியான அந்த இதழ் ஐஸன்ஸ்டன், புடோவ்கின், பேலா பெலஸ் ஆகியோரின் சினிமா குறித்த கட்டுரைகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி-யது. மேலும் இத்தாலியிலேயே இன்னொரு புதிய இளைஞன் ஒருவன் சில அற்புதமான கட்டுரைகளை எழுதி வந்தான் அவனது பெயர் லூசியோனோ விஸ்கோண்டி. பின்னாளில் இத்தாலிய சினிமாவுக்கு சில ஒப்பற்ற கலை படைப்புகளை வழங்கிய இயக்குனராக பெயரெடுத்தவர்.

இவர்கள் காலத்திலேயே இன்னொரு மார்க்சிய சிந்தனையை அடிப்படையாக கொண்ட எழுத்தாளர் ஒருவர் திரைக்கதை எழுதுவதில் புலமை பெற்றிருந்தார். சிசரே சவாட்டினி எனும் இந்த திரைக்கதையாசிரியர் தான் இத்தாலியில் தொடர்ந்து வந்த நியோரியலிஸம் எனும் அலையின் மீக முக்கியமான கர்த்தாக்க்களிலொருவராக இருந்தவர். இத்தாலிய சினிமாவிற்கு மட்டும்மல்லாமல் உலக சினிமாவுக்கே நன்கொடையாக கருதப்பங்களின் திரைக்கதை ஆசிரியராக தனது பங்களிப்பை செய்தவர்.

அடுத்த இதழில்.....
உலகை உலுக்கிய இத்தாலியின்
நியோ ரியலிஸ அலை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com