Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மார்ச் 2009
உலக சினிமா வரலாறு - மறுமலர்ச்சி யுகம் 10
ழான் ரெனுவாரும் ஐரோப்பிய கவித்துவ எதார்த்தமும்
- அஜயன் பாலா

தேசங்களின் எல்லைகளை வேண்டுமானால் மனிதன் வகுத்திருக்கலாம். ஆனால் மொழியும், கலாசாராமும் தன்னியல்பாக தோன்றுபவை. நிலத்தின் தன்மைகளுக்கேற்ப மாறும் அம்மண்ணின் இயல்புதான் அங்கு வாழும் மனிதர்களின் நடை உடை பாவனைகளை மற்றும் அவர்களுக்கான கலை இலக்கியங்களை தீர்மானிக்கின்றன.உலக சினிமாவை உற்று கவனிக்கும் ஒருவரால் ஒவ்வொரு நிலப்பரப்பும் தங்களது பிரத்யேக குணக்கூறுகளை அவற்றின் திரைப்படங்களில் தன்னியல்பாக பொதித்து வைத்திருப்பதை கண்டறிய முடியும்.

Jean Renor இதனடிப்படையில் ஐரோப்பிய நிலப்பரப்புக்கென்றே உரித்தான அந்தப் பனி படர்ந்த நிலத்திற்கான மவுனமும் கூர்ந்த அவதானிப்பும் அவர்களது திரைப்படங்களின் தனித்தன்மையை தீர்மானிப்பதாக இருக்கின்றன. இதிலும் கூட பல நுண்ணிய வேறுபாடுகளை அந்தந்த மொழி பேசும் மக்களின் குணங்களுக்கேற்ப பிரிக்க முடியும் என்றாலும் ஐரோப்பியர்களின் பொதுவான குணமான அக மனநிலை பயணத்தையே அவர்களது திரைப்பட மொழியும் நமக்கு பிரதிபலிக்கின்றன என்பதுதான் உண்மை. இப்படியான ஐரோப்பிய படங்களில் காணப்படும் அந்தவகையான பொதுவான திரைமொழியின் மவுனத்தையும், உளவியல் எதார்த்தத்தையும், கவித்துவத்தையும் ஒரு முழுமையான படைப்பின் மூலம் சாத்தியப்படுத்தி, பின்வரப்போகும் ஐரோப்பாவிம் பேரெழுச்சிகளுக் கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த பெருமை மிக்க இயக்குனர் ழான் ரெனுவார் (1894 1979).

ரெனுவாருக்கு முன்பாகவே ஐரோப்பிய திரைப்படங்களில் குறிப்பாக பிரெஞ்சு திரைப்படங்களில் சில முன்னோடிகள் இருந்தனர். இவர்களுள் மவுன திரைப்பட மேதைகளான ழான் விகோ மற்றும் ரெனே கிளார் ஆகிய இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1934ல் கிளார் இங்கிலாந்துக்கு மூட்டையை கட்டிக்கொண்டு நிரந்தரமாக குடிபெயர்ந்து விட, தொடர்ந்தாற் போல் விகோவும் தன் உயிர்பயணத்து௧கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டதோடு பிரெஞ்சு சினிமா முற்றிலுமாக நிலை குலைந்து போனது. 1940 வரையிலான பிரெஞ்சு சினிமாவின் நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் ஓரளவு குறிப்பிடத்தகுந்த படங்களை தந்த ஓற் இயக்குனர் ஜேக்கஸ் பெய்டர்..அமெரிக்காவிலிருந்து தனிப்பட்ட பிரச்Cனை காரணமாக பிரான்சிற்கு வந்து குடியேறிய பெய்டரின் திரைப்படங்களில் காணப்பட்ட இலக்கியநயம் ஐரோப்பிய சினிமாவின் தனித்தன்மையை ஓரளவுக்கு கோடிட்டு காண்பித்தது. அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவற்கள் இருவர். அதில் ஒருவர் அவருடைய திரைக்கதையாசிரியாரான ஜேக்கஸ் ரிவட். இன்னொருவர் கலை இயக்குனரான சார்லஸ் லெஸர்.

இதில் ஜேக்கஸ் ரிவெட் பிரெஞ்சு மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான புகழ்பெற்ற சர்ரியலிஸ கவிஞர். அவரது இயல்பான கவித்துவ செழுமை திரைக்கதையில் உண்டாக்கிய சில மாய்மாலம் காரணாமாகத்தான் பிரெஞ்சு சினிமா மீண்டும் உயிர்பெற துவங்கியது. தொடர்ந்து பெய்டரின் உதவி இயக்குனரான மார்சல் கார்னே இயக்குனரான போது, ரிவெட் அவருக்கும் ஆஸ்தான திரைக்கதையாசிரியராக இருந்து பணியாற்றி பிரான்சில் கவித்துவம் மிளிரும் படைப்புகளுக்கான சூழலையும் முன்னூட்டத்தையும் ஏற்படுத்தி தந்தார். 1942ல் இருவரது கைவண்ணத்தாலும் உருவான “தி டெவில்ஸ் என்வாய்’ அவர்களது பயணத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாகும். இதில் ஹிட்லரை தீமையின் குறியீடாக பயன்படுத்தியிருந்தவிதம் அவர்களது மேதமைக்கு சான்றாக விளங்கியது. இவர்களது படைப்பில் வெளியான இன்னொரு படமான “சில்ரன்ஸ் ஆப் பேரடைஸ்’ இருவரது வாழ்நாளின் மிகச்சிறந்த படைப்பாக உருவாக்கம் பெற்¢றது.

இப்படியாக ஐரோப்பிய சினிமாவில் அங்¢கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வீசிவந்த கவித்துவ காற்று ரெனுவாரின் வரவுக்கு பிறகு ஒரு மகத்தான அலையின் துவக்கமாகவே வீசத்துவங்கியது. அய்ரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்களில் காகின், செஸான், வான்கா போன்றவர்களோடு போட்டியிடதகுந்த மிகச்சிறந்த ஓவியரான அக்ஸ்டெ ரெனுவாரின் மகனாக பிறந்தவர் ழான்ரெனுவார்(1894 1970). காலத்தின் மிகச்சிறந்த ஓவியருடைய மகனாக பிறந்த காரணத்தினாலோ என்னவோ ழான் ரெனுவாரின் உள்ளத்தில் இயல்பாகவே உடைப்பு கொண்ட கலையின் ஊற்று அதுவரையில் திரையில் காணாத கவித்துவமான எதார்த்தமான உலகை திரையில் சிருஷ்டிக்க விழைந்தது. மவுனப்படகாலங்களில் தன் இயக்குனர் பயணத்தை துவக்கிய ரெனுவார் 1931ல் தன் முதல் சப்த சினிமாவான ‘பர்ஜிங் தி பேபி’ படத்தை வெளியிட்ட போது அதன் பெருவெற்றி காரணமாக தனது இருப்பை பதிய வைத்துக்கொண்டார்.

Jean Renor தொடர்ந்து அவர் இயக்கிய போடோ சேவ்டு ப்ரம் டிரவுணிங்(1932) , மாடம் பவாரி (1934) டோனி (1935) போன்ற படங்கள் படுதோல்வியை தழுவ அடுத்து என்ன மாதிரியாக படம் பண்ணுவது என தெரியாமல் குழம்பிப்போய் நின்றார். இச்சமயத்தில்தான் காலத்தின் கவிஞனும் பிரெஞ்சு சினிமாவின் அடையாளம் உயிர்தெழ காரணமானவனுமான கவி ஜேக்கஸ் ரிவெட்டுடன் ரெனுவார் முதன் முதலாக கைகோர்க்க துவங்க புதிய அலையின் துவக்க புள்ளி ஆரம்பமானது. 'தி க்ரைம் மொனேசர்' ஏஞ்சல் 1935ல் வெளியான இப்படம் முதலாளி பாதியில் விட்டு ஓடிப்போன ஒரு தொழிற்சாலையை தொழிலாளர்களே கூட்டு முயற்சியில் காப்பாற்றி அதனை வெற்றி பெற௩ செய்யும் கம்யூனிச சித்தாந்த அடிப்படையிலான கதையை கொண்டிருந்தது. இ௭திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரது கூட்டணியிலும் உருவாக்கம் பெற்ற அடுத்த படைப்பான ‘லைப் இஸ் அவர்ஸ்’ 1936 படமும் பெருத்த வரவேற்பையும் மிகுந்த கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டு திரையரங்குகளிலிருந்து படச்சுருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரணம் இப்படத்திலும் காத்திரமாக ஒலித்த கம்யூனிச ஆதரவு குரல். இக்காலகட்டத்தில் ஐரோப்பா முழுக்க எதிரொலித்த பாசிச அலை கம்யூனிசத்தை அதன் அனைத்து வழிகளிலும் தீவிரமாக அடக்கி ஒடுக்க முயற்சி செŒதது. அதிலும் ரெனுவாரின் படங்களில் இக்குரல் உரத்து காணப்பட்டதால் அவரது திரைப்படத்தை முழுமையாக ஒடுக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டது. இதனால் தன் கவ னத்தை சிலகாலம் நாவல்களை பட மாக்குவதில் திருப் பிக் கொண்ட ரெனுவார் 1937ல் தன் வாழ்வின் முதல் உலக௭ திரைப்படத்தை வெOJட்டு திரைப் பட விழாக்களில் புதிய ஈர்ப்பையும் கவனத்தையும் கண்டடைந்தார். லா கிராண்டே இல்லூஸன் எனும் போரை பின்புலனாக கொண்ட இப்படம் ஜெர்மனியில் முழுமையாக தடைசெய்யப்பட்டாலும் வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த கலை ஆளுமைக்கான பரிசை வென்றதோடு நியுயார்க் கிரிடிக்ஸ் அவார்டையும் அந்த வருடத்தில் தட்டிச்சென்றது. இது மட்டுமல்லாமல் பிற்பாடு ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் உலக சினிமா வரலாற்றில் அதுவரை வெளியான படங்களில் Cறந்த பத்து படங்களில் ஒன்றாகவும் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

லாகிராண்டேவில் ராணுவதிகாரியாக நடித்த ‘எரிக் வான் ஸ்ட் ரோ Aம்’ சிறந்த நடிப்பிற்கான இலக்கணங்களை இப்படத்தில் உருவாக்கியிருப்பதாக பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின. படத்தின் ஒளிப்பதிவில் முதன் முதலாக டீப் போகஸ் லென்ஸ்களை பயன்படுத்தி காட்சிகளில் பாற்வை யாளனிடமிருந்து இன்னும் ஆழமான கவனக் கூர்மையை பெற்று அவனது கனவு நிலையை விஸ்தீரணப்படுத்தினார். ஓற் அண்மை காட்சி எனப்படும் க்ளோசப், இடைநிலை எனப்படும் மிட், சேய்மை எனப்படும் லாங் ஆகிய மூன்று ஷாட்களின் மூலமாக பார்வையாளனின் மனநிலைக்குள் உருவாக்க௧கூடிய அனுபவங்களை வைந்த டீப் போகஸ் லென்ஸ்கள் ஒரே ஷாட்டில் ஏற்படுத்த௧ கூடிய தம்மை நிரம்பியது என்பதுதான் இதன் சிறப்பு. ஒரு ஷாட்டில் அல்லது காட்சியில் போர் கிரவுண்ட் எனப்படும், முன் தளம் மற்றும் பே கிரவுண்ட் எனப்படும் பின் தளம் ஆகியவற்றின் விவரணங்கள் மிக துல்லியமாக இந்த லென்சில் பதிவாக்க கிடைப்பதன் மூலம் பார்வையாளனை கதையின் களனுக்கே முழுமையாக கொண்டு போகக்கூடிய தருணத்தை இந்த லென்ஸ§கள் உருவாக்கி தருகின்றன.

தொடர்ந்து 1939ல் வெளியான ரூல்ஸ் ஆப்தி கேம்ஸ் அக்காலத்தைய பிரெஞ்சு சமூகத்தின் அவலங்களையும்,வாழ்வையும் தோலுரித்து காட்டுவதாக இருந்தது. ஒளிப்பதிவு படத்தொகுப்பு ஆகிய தொழில்நு௫பங்களில் இப்படம் ரெனுவாரின் மொழி குறித்த ஆழ்ந்த புலமையையும் மேதமையையும் வெளிப்படுத்தியது, படத்திலிடம் பெறும் முயல் வேட்டை காட்சியில் மேற்சொன்ன தொழில் நுட்பங்கள் இரண்டின் மூலம் ரெனுவார் உருக்கி காண்பிக்கும் மேதமை அனுபவத்தால் மட்டுமே பகிர்ந்துக் கொள்ளக்கூடிய உயர்ந்த கலாரசனையை உள்ளடக்கியது. மேலும் காட்சி எந்த௭ திட்டமிடலும் இல்லாமல் இயற்கையாக நிகழும் ஒரு சம்பவத்தை அப்படியே தன்னியல்பாக படம் பிடிக்கிறார் போல் நமக்குள் ஒரு மாயகட்டுமானத்தை உருவாக்கும் பொருட்டு ஷாட்டுகளை அவர் கட்டமைத்திருந்த விதம் இன்றும் இப்படத்தை பார்ப்பவர்களை பிரமிக்கசெய்யும்.

ரூல்ஸ் ஆப் தி கேம் வெளியான போது படுதோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களிலேயே வெடித்த இரண்டாம் உலகப்போர் காரணமாக இத்திரைப்படம் ஐரோப்பா முழுக்க தடை செய்யப்பட்டிருந்தது. மட்டுமல்லாமல் இப்படத்தின் பிரதிகள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு முழுமையாக அழித்தொழிக்கப்பட்டன. பிற்பாடு 1950ல் இப்படத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக கடும் பிராயசையுடன் இரண்டு பிரெஞ்சு இளைஞர்கள் மீண்டும் இப்படப்பிரதியை தேடிக‡டடைந்து உலகிŸகு மீண்டும் திரையிடப்பட்டபோது விமர்சகர்கள் ஒருசேர எழுந்து நீண்ட கரவொலி எழுப்பி அது வரைMலான அனைத்து படங்களிலும் சிறந்த படமாக தேர்வு செய்தனர்.இடைக்காலத்தில் அமெரிக்காவுக்கு சென்று அங்கு சில படங்களை இயக்கிய ரெனுவார் 1949ல் இந்தியாவிற்கு வந்து கல்கத்தாவில் தங்கி ரிவர் எனும் படத்தை இயக்கினார். அவரது படப்பிடிப்பின் போது கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வங்காளி இளைஞனுக்கு மனதில் பல பாதிப்புகள். ஒரு நாள் நாமும் இது போல ஸ்டார்ட் கட் என சொல்லும் பணியை செய்ய வேண்டும் என கனவு கண்டான் அடுத்த ஐந்தாவது வருடத்திலேயே பதேர் பாஞ்சாலி எனும் படத்தின் மூலம் அவனது கனவு பலித்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு உலக அரங்கில் முதல் கவுரவமும் கிடைத்தது.

ரிவர் வெளியான பிறகு 1970ல் இறப்பு வரை ரெனுவார் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியவண்ணம் இருந்தார். அவர் இறந்த அமெரிக்காவின் உயர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக கருதப்பட்ட ஆர்சன் வெல்ஸ் உலகின் தலைசிறந்த இயக்குனர் நம்மை விட்டு பிரிந்தார் என அறிவித்தார். ஆனால் ரெனுவார் ஒருபோதும் தன்னை இயக்குனராக கருதிகொண்டதில்லை. நான் ஒரு கதைசொல்லி அவ்வளவே என்பதுதான் அவர் தன்னை பற்றியும் தனது படைப்புகளைப் பற்றியும் தனக்கு தானே எழுதிக்கொண்ட தீர்ப்பு.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com