Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நூல் அறிமுகம்
மதுரகவி பாஸ்கரதாஸ்
ந.முத்துசாமி


மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் (1917-1951),
முருகபூபதி,
பாரதி புத்தகாலயம், ரூ.400 பக். 720

Mathurakavi Bhaskaradoss ‘மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்’ என்ற புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதவேண்டும் என்று முருகபூபதி ஊரிலிருந்தபடியே தொலை பேசியில் கேட்டுக்கொண்டார். அப்போது கோணங்கி-யும் பேசினார். இவர்கள் இரண்டுபேர் மேலும் எனக்கு பெரிய மதிப்பு உண்டு. பெரிய திறமைசாலிகள். பெரிய தேடல் உள்ளவர்கள். இவர்கள் இரண்டு பேரும் மதுரகவி பாஸ்கரதாஸின் பெண் வயிற்றுப் பேரர்கள் என்றும் எனக்கு மதிப்பு இருந்தது. இது ஒரு அடை-யாளத்துக்குத்தான்-. திறமையும் தேடலும் படைப்-பாற்றலும் இல்லாதவர்களாக இவர்கள் இருந்திருப்-பார்களானால் இந்த அடையாளத்தினால் என்ன பயன்! ஆனால் இந்த அடையாளம், இப்போது ‘என் நோற்றான் கொல்’ என்ற பழைய சொல்லுக்கு பல வகையில் அர்த்தம் ஏற்றிவிடுகிறது. முருகபூபதியுடைய நண்பர் செல்வம் என்பவர் குழந்தைகளுக்கான ‘குன்னாங்குன் னாங்குர்ர்ர். . . ‘ என்ற நாடக விழாவை இவர்கள் ஊரில் நடத்திய போது, மதுரகவி பாஸ்கர-தாஸ் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் முருகபூபதி நடத்தினார். அது எனக்கு மறந்து போய்-விட்டது. ஏற்கனவே என் மனதில் இருந்த பாஸ்கர-தாஸின் அறிமுகம் மட்டும்தான் தங்கியிருந்தது. இப்போது அவருடைய நாட்குறிப்புகளை படிக்கும்-போது ‘என்ன பிரமாதமான மனிதர் இவர்’ என்ற எண்ணம் உண்டாக்குகிறது. மதுரகவி என்ற புனைவு எவ்வளவு அற்புதமாக இவர்மேல் பொருத்தப்பட் டிருக்கிறது. மதுரம் என்ற சொல்லுக்கு இனிமை என்றுதான் அகராதி பொருள் கொள்கிறது. ஆனால் அனுபவம் மதுரத்திற்கு எத்தனை போஷக்கை மனதில் ஏற்றியிருக்கிறது...

...காங்கிரஸ்காரராகவும் தேசப்பக்தி பாடல்களை எழுதிக்கொண்டும் கதர் அணிந்துகொண்டும் கதர் வஸ்திரங்களை பரிசளித்துக் கொண்டும் இருந்த ஒருவரை ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட, சமூகம் ஏன் நினைவில் வைத்திருக்கவில்லை. அவர் ஜெயிலுக்கு போகவில்லை என்ற காரணத்தினாலா? ஜெயிலுக்குப் போன பலரை நாம் மறந்துவிட்டோம். தமிழ்ச் சமூக நினைவு மிகவும் விநோதமாக உள்ளது. மிகப் பலரை அது நினைவில் வைத்திருக்கவில்லை. நாமக்கல் கவிஞரைக்கூட அது மறந்துவிட்டது. மிக எளிய பாடல்களை அவர் எழுதினார் என்பதால் அவருக்கு பெயரில்லாமல் போய்விட்டதா? அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் விமர்சனத்திற்கு ஆளாகி-யிருக்கிறார். அது நியாயமான விமர்சனம் தானா என்பதுகூட யாருக்கும் தெரியாது. இன்று மறுபரி-சீலனை செய்து பார்க்கலாம் அல்லவா? தனது ஸ்தானத்தை இங்கு மீண்டும் ஸ்தாபிக்க விரும்பும் காங்கிரஸ் இந்தக் காரியங்-களையும் செய்யலாம் என்று தோன்றுகிறது.

பாஸ்கரதாஸ் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்-களைக் காட்டிலும் கூடுத-லாக ராமானுஜத்துக்குத் தெரியுமா என்பதைத் தெரிந்துகொள்ள ராமானு-ஜத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவருக்குக் கூடுதலாக தெரிந்தது. அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்.

அவர் பயணப்பட்டுக் கொண்டே இருந்த இந்த நாட்குறிப்புகளில், பாடல்களையும் நாடகங்களையும் எழுதிக் கொண்டே இருந்தார். அவருடைய பாடல்-களின் இலக்கியத் தரத்தையும் நாடகங்களின் நாடகப் பண்புகளையும் தெரிந்து கொள்வோம் என்றால் ஒன்று கூட உடனே கைவசத்திற்கு வர மாட்டேன் என்கிறது. சிறிது சிரமம் எடுத்துக் கொள்ளாமல் அவற்றைக் கண்டுபிடிக்க முடியமாட்டேன் என்கி-றது. அவற்றை நான் தெரிந்து கொள்ள முயல-லாம். நான் ஆராய்ச்சி எதிலும் ஈடுபடாவிட்டால்கூட நம் ஆர்வத்தின் காரணமாக அதில் ஈடுபடலாம். சிறிது கூடுதல் தகவல்களை இந்த ‘யூ ட்யூப்’களுக்குள் கொடுத்திருந்தார்களானால் நான் வீட்டில் இருந்த படியே அவற்றை தெரிந்து கொண்டிருக்க முடியும். எத்தனையோ விஷயங்களை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடிகிறபோது மதுரகவி பாஸ்கரதாஸின் பாடல் களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள முடிய-வில்லை....

... நான் நாற்பதுகளில் சுதந்திரம் அடைவதற்கு முன்பும் அடைந்த பின்னரும் கோவலன் கண்ணகி, வள்ளி திருமணம் இப்படிப்பட்ட நாடக செட்டு-களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை எழுதி-ய-வர்களின் பெயர்கள் எதுவும் தெரியாது. அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் இன்று பல சந்தேகங்கள் இல்லாமல் நான் இருந்திருப்பேன்....

...இதை நான் சுருக்கமாக சொல்ல நினைக்கிற-போது எனக்குத் தோன்றுகிறது. நாளைக்கி தன் பேரன்களில் ஒருவர் தன் நாட்குறிப்புகளை புத்தக-மாக வெளியிடு-வான் என்பதும் அதற்கு ஒரு வரலாற்று முக்கியத்-துவம் உண்டாகிவிடும் என்பதும் பாஸ்கரதாஸ் அவர்கள் எண்ணியிருந்தாறானால் இந்த நாட்குறிப்பு-களை இன்னும் விரிவாக எழுதியிருப்பார். அவரு-டைய நோக்கம் நாளைக்கு ஏதாவது வழக்கு கிழக்கு என்று வருமானால் இது உதவியாக இருக்கும் என்றே, யார் எப்போது வந்துவிட்டுப்போனார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதே என்றுதான் இருந்திருக்கும் போலி-ருக்கிறது...

...குரங்குப்புத்தூர் மாமா கொண்டுவந்த கிராமஃபோன் அந்தப்பருவத்தில் அதனருகில் நான் நின்றிருந்தால் எம்பித்தான் அதற்குள் இருக்கும் இசைத்தட்டை வைப்பதற்கான தட்டையும் சவுண்ட் பாக்ஸையும் பார்க்க முடிந்-திருக்கும். நாங்கள் பயந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்-டிருக்க அது கூடத்தில் மேல் கைச்சுவர் ஓரமாக வைக்கப்பட்-டிருந்தது. எவ்வளவு அற்புதமான காரியத்தைச் செய்து விட்டுப்போயிருக்கிறார் பாஸ்கரதாஸ். இருளோடும் இருட்டை விரட்டும் உபகரணங்க-ளோடும் அது ஒரு சிலருக்கே சாத்யமாகி இருந்திருப்-பதோடும் எல்லாம் கால்நடையாகத்தான் நடந்து கடத்தவேண்டிய புழுதிக் கால்களோடு தவம் வாங்கும் குழந்தைக் கால்களோடும் எல்லாம் செம்பனார்-கோயிலுக்கு போய் பார்க்க வேண்டி-யிருந்ததாலும் குரங்குப்புத்தூர் மாமா கொண்டு வந்த கிராமஃபோன் பெரிய கற்பனைகளும் கதைகளை-யும் சேர்த்து கொண்டு வந்துவிட்டது. குரங்குப்புத்தூர் மாமா ஏற்கனவே வசதியானவர். எனவே அவர் மண்ணெண்ணை வாங்குவதற்கு அஞ்ச-வில்லை. மேலும் அப்போது இரண்டாம் உலகப்போரின் பாதிப்பு எல்லோரையும் பீடித்துக்கொண்டிருந்தது. எனக்கு அல்லவா தெரியும் மண்ணெண்ணெய் ரேஷனுக்கு க்யூவில் நின்று கொண்டிருந்தது. மாயூரத்-திற்கு படிக்கப்போனபோதும் இந்த ரேஷன் க்யூவில் நிற்பது என்னை விடாமல் பிடித்துக் கொண்-டிருந்தது. அவருக்கு மண்ணெண்ணெய் போதாக்-குறைக்கு குரங்குப்புத்தூலிருந்தே வந்துவிடும் போலி-ருக்கிறது. அவருடைய பண்ணையாட்கள் பெரிய அரிவாள்களை வைத்துக்கொண்டிருப்பார்கள். பிடியைப் பிடித்து கொண்டிருப்பார்கள். அரிவாளின் இலை அக்குளில்போய் முட்டிக் கொண்டிருக்கும். திருடர்கள் பற்றியும் திருடர்களை போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போனதைப் பற்றியும் பேசுகிறார் பாஸ்கரதாஸ். ஓர் இடத்தில்கூட பெரிய வெட்டரி-வாள்களைப் பற்றி பேசவே இல்லை. பின்னாளில் சினிமாக்காரர்கள் இதை சீரழித்துவிடுவார்கள் என்று அவருக்கு ஞானதிருஷ்டியில் தெரிந்து விட்டிருக்-கிறது போலிருக்கிறது. இந்த அரிவாளை எங்களூரில் ஆடுதுறை அரிவாள் என்பார்கள். கீழிருந்தபடியே வாழைக்குலைகளை வெட்டு-வதற்கும் வாழை மரங்களை அரிந்து சாய்ப்பதற்கும் இந்த அரிவாள் பயன்பட்டதால் இதற்கு வாழைக் கொலை அரிவாள் என்றும் பெயர் உண்டு. இரவு நேரத்திலும் பெட்ரோ-மாக்ஸ் விளக்கு வைத்துக்கொண்டு கிராமஃபோன் ரிகார்டுகளைப் போடுவார் குரங்குப்புத்தூர் மாமா. தெருவில் உள்ள எல்லாரும்---_ஆண்கள் குழந்தைகள் அங்கு கூடியிருப்-பார்கள். வடுவத்தெருவிலிருந்து கஸ்தூரி நாயுடு போன்றவர்கள் வருவார்கள். அவர் ருக்மணி குக்கரில் சமைப்பார். மிகவும் வாசனையான சோப்புகளை உபயோகித்து குளிப்பார். இவையெல்-லாம் சேர்ந்து எங்களுக்கு அந்தப் பாட்டுக்களை கேட்பதற்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கும். எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே எங்கள் அப்பா இறந்துவிட்டார் என்று ஏற்கனவே பல இடங்களில் சொல்லியிருக்-கிறேன். இப்போது எனக்கு ஞாபகத்-துக்கு வருகிறது. வயதான எங்கள் பாட்டியும் அங்கு வருவாள். எங்களை அழைத்து கொண்டு போவதற்-காவது அவள் அங்கு வந்தாக வேண்டுமல்லவா? எங்கள் அப்பா, பெரியப்பா இன்றும் அந்த வயதில் இருந்த பலரோடு படித்த இரண்டு தட்டாத்திகளோடு அவருக்கு உறவு இருந்தது. சமயத்தில் அவர்களும் ருக்மணி குக்கரில் சமைப்பார்கள். அக்ரகாரத்தில் உள்ள யாரும் அவரை ‘ஐயோ இந்தப் பிராமணன் இப்படி அநியாயம் பண்றாரே! என்று குறைபட்டு கொண்டதில்லை. அக்ரகாரத்தில் உள்ள அவர்களை ஒத்த பெண்களுக்கு இவர்கள் இருவரும் நண்பர்கள். என் நண்பர்களில் ஒருவரான என்னைவிட ஒரு வயது பெரியவரான ஒருவர் குடித்துவிட்டுப் போய் அவர்கள் வீட்டு முன் பலநாள் விகாரமாகத் திட்டி கத்தியதைத் தான் நாங்கள் விகாரமானதாக நினைத்தோம். இரவு பெட்ரோ மாக்ஸ் வெளிச்சத்தில் அவர்கள் இருவர், எங்கள் பாட்டி, நாங்கள் குழந்தைகள் பல வயதில் பெண் குழந்தைகளும் உட்பட அங்கு உட்கார்ந்து பாட்டுக் கேட்டு கொண்டிருப்போம். பாஸ்கரதாஸ் குறிப்பிட்டுள்ள பல சங்கீத வித்வான்களும், நடிகர்-களும் பாடியுள்ள பல பாடல்களைக் கேட்டுக்கொண்-டிருப்போம். அவர்களைப் பற்றிய செய்திகளை அப்போது குரங்கு புத்தூர் மாமா பேசியதை கேட்டி-ருந்தேன். அவர்களில் பாஸ்கரதாஸ் இருந்தாரா என்பது ஞாபகமில்லை. எஸ். ஜி. கிட்டப்பா-வும், கே.பி.சுந்தரம்மாளும் கல்யாணம் செய்துக்கொண்-டார்கள் என்பதைக் கேட்டிருக்கிறேன். இப்போது-தான் கிட்டப்பா தன் 28 வயதில் நான் பிறப்பதற்கு 3 வருஷங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதை தெரிந்து கொள்கிறேன். அதற்கு பிறகு சுந்தரம்மாள் விதவையாக வாழ்ந்தார் என்றும் அப்போதே கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த நாட்குறிப்பு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. இதை படித்தபோது இன்னும் தகுதியான ஒருவர் இதற்கு முன்னுரை எழுத வேண்டும் என்று தோன்றிற்று. இந்தப் புத்தகத் தயாரிப்பில் கடைசிக் கட்டத்தில் பங்கு கொள்வதற்-காக முருகபூபதி இங்கு வந்தார். அவரிடம் இதைச் சொன்னேன். கூத்துப்பட்டறையில் எனக்கு 30 ஆண்டு-களுக்கு மேலாக நடிகர்களோடு தொடர்பு இருப்ப-தாலு-ம் நடிகர்களை பயிற்றுவிப்பதாலும், பாஸ்கரதாஸ் செய்த சில காரியங்கள் என் காரியங்களை ஒத்திருப்ப-தாலும் என்னை எழுதச் சொன்னேன் என்றார் முருகபூபதி....

.... இவற்றையெல்லாம் பார்க்கிறபோது மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் பெரிய முக்கியத்-துவம் உள்ளதாக இருப்பது எனக்கு தெரிகிறது. அலைந்து திரிந்து நாடகங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டும் பாடல்களை எழுதிக் கொண்-டும் நாடகங்களை எழுதிக் கொண்டும் நடிகர்களோடு தொடர்ந்து பழகிக்கொண்டும் இருந்த ஒருவர் எப்படி பல நுட்பங்களை தெரிந்து கொள்ளாமல் இருந்-திருப்பார். உரத்த குரலில் பெரிய கட்டத்தை எட்டு-வதற்காக பாடிப் பழகியவர்கள் வெளிப்-படுத்தும் பாவங்களுக்கு தனி அழகிருப்பது நன்றாகவே தெரி-கிறது. இன்று அதெல்லாம் போய்விட்டது. உங்கள் குரலை ஆயிரக்கணக்கான-வர்கள் கேட்பதற்கு நவீன வசதிகள் வந்துவிட்டன. அந்த உபகரணங்-களின் வளர்ச்சியில் குரலின் பாவங்கள் வேறு வகையில் புலப்படுத்தப்படு-கின்றன. உச்சத்துக்கு போக பழகிய ஒரு குரல் வேறுவகையில் பாவங்களை வெளிக் கொண்டு வருகின்றன. எஸ்.ஜி. கிட்டப்பாவின் நாடகங்கள் மேடையேற்றபடும்போது முதல் நாள் முதல் வரிசையில் வயலின் கோவிந்தசாமி பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, அரியக்குடி ராமனுஜ அய்யங்கார் ஆகியவர்கள் உட்கார்ந்து நாடகங்கள் பார்ப்பார்களாம். இவருடைய வாசிப்பையும், பாடல் தோரணையையும் கிட்டப்பா எந்தவகையில் பாதித்திருப்பார். எஸ். ஜி. கிட்டப்பாவின் சகோதரர்-களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் சங்கீதம் சொல்லி கொடுத்தாராம். அப்போது சிறுவனான கிட்டப்பா அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அது எந்தளவு கிட்டப்பாவின் சங்கீதத்தை பாதித்தது. இவர்கள் எல்லோருடைய பாடல்களையும் கேட்டுக்-கொண்-டிருந்த மதுரகவி பாஸ்கரதாஸின் பாடல்கள் எவ்வகை பாதிப்புக்கு ஆளாகின. அதெல்லாம் எனக்கு தெரியவில்லை.

தினமும் காலையில் நான் எழுவதறகு முன் இஞ்சிக்குடி பிச்சைக் கண்ணுவின் சங்கீத பயிற்சியைக் கேட்டுக்கொண்டிருப்பேன். இஞ்சிக்குடி என்பது எங்கே இருக்கிறது என்பது இன்றுவரை தெரியாது. ஆனால் இஞ்சிக்குடி பிச்சைக் கண்ணு, என் மனைவியின் வீட்டிற்கு எதிர் வீட்டில் மாயூரத்தில் மாயூர் நாத கோயில் வடக்கு மாட விளாசம் சந்தில் இருந்தார். அவரைச் சந்தித்ததைப் பற்றியெல்லாம் இந்நாட்குறிப்பில் இருக்கிறது. பல ஆண்டுகள் நான் இஞ்சிக்குடி பிச்சைக் கண்ணுவின் நாதஸ்வர பயிற்சியைக் கேட்டிருக்கிறேன். வண்டிக்காரத் தெரு சகோதரர்களின் நாதஸ்வரம் மிகவும் பிடித்திருந்தது. வண்டிக்காரத் தெரு நாதஸ்வர வித்துவான் ஒருவரைப் பற்றி பாஸ்கரதாஸ் எழுதுகிறார் மதுரகவி பாஸ்கர-தாஸ் எனக்கு மிகவும் நெருக்கமாக வந்துவிட்டார். அவருடைய பேரன்கள் வகையில் மட்டுமல்ல பல வகைகளில். திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளையின் வீடு மாயூர்நாத சுவாமி கோயில் மேல வீதியில் இருந்தது. அவர் சில ஆண்டுகள் அருணகிரி நாதர் சங்கீத விழாவை மாயூரத்தில் நடத்திக் கொண்-டிருந்தார். அப்போது நான் பல வித்வான்களை கேட்டிருக்கிறேன். திருவெண்காடு எங்கள் புஞ்சைக்கு அருகில் தான் இருக்கிறது. நாங்கள் காவிரிபூம்பட்-டினம் போகிறபோது திருவெண்காட்டுக்கும் போய் வந்திருக்கிறோம், திருவெண்காடு சாமி கோயில் தேரைப் பற்றி எங்கோ எழுதியிருப்பதாக தோன்று-கிறது. அது உண்மையோ இல்லையோ தெரிய-வில்லை. நான் சிறுவனாக எங்கள் பெரியம்மாவோடு திருவெண்காட்டுக்கு போயிருக்-கிறேன். அங்கே நதியில் குளித்திருக்கிறேன். காவிரிதான் போலும். இல்லையென்றாலும் பரவாயில்லை. தண்ணீரெல்லாம் கங்கா ஜலமாக-வும் காவிரியாகவும் தாமிரபரணி தண்ணியாகவும் இங்கே இந்த நாட்டில் சிறு குட்டைகளில்கூட இந்த நதி நீர்தான் ஊறுகின்றன.

மனதில் ஆயிரம் ஊற்றுக் கண்கள் ஊறுகின்றன. 35 ஆண்டுகள் தினந்தோறும் எழுதிய குறிப்புகள், ஒரு பன்னிரண்டாயிரம் குறிப்புகள் என்று வைத்துக்-கொள்வோம். சங்கீதம் கேட்போருக்கும், நாடகங்கள் பார்ப்போருக்கும் இலக்கியம் படிப்போருக்கும் இவை பல்லாயிரம் ஊற்றுக் கண்கள் தான்.

நான் படித்த உ. வே. சாமிநாத அய்யரின் என் சரிதத்தையும் கனம் கிருணய்ய கோபால கிருஷ்ண பாரதியார், பம்மல் சம்பந்த முதலியார் முதலியவர்-களின் வாழ்க்கை வரலாறும், சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறும் தியாகராஜ பாகவதர் கதையும் எனக்கு மறந்து போய்விட்டன. அவற்றின் நினைவோடு மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்பை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மௌனி சொல்வார் டி.என். ராஜரத்தினம் பிள்ளை வாசித்துக் கொண்-டிருந்தபோது ஒரு கார் வழி கேட்டு ஊதிக்கொண்டு அப்பால் தாண்டிப் போயிற்றாம், அதற்கு பிறகு அவரு-டைய வாசிப்பு அந்த ஹார்னின் சத்தத்தை அடிப்-படையாகக் கொண்டு வாசிக்கப்பட்டதாம். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் அவற்றை வாசிக்க-போகிறவர்களை எப்படி உத்வேகப்படுத்த போகி-றதோ? இதை வாசித்தது எனக்கு மிகவும் சந்தோஷ-மாக இருக்கிறது. முருகபூபதிக்கு என் வாழ்த்துகள்.

(நூலின் முன்னுரையிலிருந்து சுருக்கப்பட்ட பகுதி)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com