Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நூல் அறிமுகம்
மீனவர்களின் பஞ்சாயத்து
மயில்வாகனன்


மீனவர்களின் பஞ்சாயத்து தீர்ப்புகள், மா. இராமஜெயம்,
வெளியீடு : மணிமொழி பதிப்பகம்,
புதுச்சேரி 7,
ரூ.125 பக். 188

Fishers மீனவர்களின் பஞ்சாயத்து தீர்ப்புகள், என்ற இந்நூலில் மீனவர்களின் வாழ்க்கைமுறையையும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே பஞ்சாயத்தில் பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்பதும் ஒவ்வொரு தீர்ப்பும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மீனவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக உள்ளது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

-9/கோஷ்ட்டி சண்டை தலைப்பில் ப/63_ல் உள்ள தீர்ப்பு

போலிஸ் ஆய்வாளர் கூறும் போது ஊர் பஞ்சாயத்து இருக்கிறதனால தான் நாங்கள் போலிஸ் நிலையத்தில் நிம்மதியாக இருக்கோம். உங்க சாதியில் பிரச்சனைன்னா எங்களுக்கு கஷ்டம் இல்லீங்க பஞ்சாயத்துப் பார்த்தாலோ போதும் நீங்கள் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. உங்களுக்கு உள்ள கட்டுப்பாடு மற்ற சாதி மக்களிடம் இல்லை. அதனால் அவர்களிடம் நாங்கள் கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஊர் பஞ்சாயத்தை மீறி நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

மேலும் இதே நூலில் தீர்ப்பு _ 4 நீதிபதி ஏற்றுக் கொண்ட பஞ்சாயத்துத் தீர்ப்பு _ ப/116_ல் ஒருவருக்கு இரண்டு மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். அவர் உயிரோடு இருந்த வரையிலும் இரண்டு குடும்பத்துக்கு தனிதனியாக சொத்துக்களை பிரித்துக் கொடுத்-திருக்கிறார்.

பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் அவர் இறந்த பிறகு .... முதல் தாரத்து மகன் சொத்தில் எனக்குதான் உரிமையுண்டு சட்டப்படி நான்தான் வாரிசு என்று சொல்லி கோர்ட்டில் கேஸ்போட அந்தக் கேஸ் முடியாமல் ஆறு வருடங்களாக இழுத்துக் கொண்-டிருக்கும் நிலையில் இரண்டு குடும்பத்தாரும் பஞ்சாயத்-தாரிடம் முறையிட அவர்கள் இரண்டு குடும்பத்தில் உள்ள பசங்களுக்கு தனியாக இறந்தவரின் இரண்டு மனைவிகளுக்கு தனியாக சொத்தை பிரித்துக் கொடுத்தது பஞ்சாயத்து தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை கோர்ட் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்-டிருக்கிறது.

போலிசும் கோர்ட்டும் மீனவர்கள் பஞ்சாயத்து தீர்ப்பில் தலையிடுவது கிடையாது என்ற செய்தி நமக்கு ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

மீனவர்கள் கடலில் நடக்கும் சண்டைகளையும், பிரச்சனைகளையும், தீர்க்க எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் அவர்கள் பஞ்சாயத்து மூலமாக பிரச்ச-னையை தீர்த்துக் கொள்வது நமக்கு புதியதாகவும் சரியாகவும் படுகிறது.

மீனவர்களின் ஊர் கட்டுப்பாடு, பஞ்சாயத்து தீர்ப்புக்கு கட்டுப்படுவது அவர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத நிகழ்வாகவே இருக்கிறது. இது அவர்களுக்கு பஞ்சாயத்து தீர்ப்பின் மேல் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக இந்தப் புத்தகத்தில் உள்ள பஞ்சாயத்து தீர்ப்பில் எங்கும் ஒருதலைபட்சமான தீர்ப்பை அல்லது தீர்வை காண முடியவில்லை, அது அவர்களின் நேர்மையை எடுத்துக்காட்டுகிறது.

மீனவர்களின் வாழ்வியலும், பஞ்சாயத்து தீர்ப்பை-யும் நாம் அவசியம் படித்து தெரிந்து கொண்டு பாதுகாக்க வேண்டிய புத்தகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com