Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நூல் ஆசிரியர்-சந்திப்பு
‘உடலின் மொழி’ உமர்பாரூக்குடன் ஒரு சந்திப்பு
மா. காமுத்துரை


இது, ‘மாற்று’களின் காலம். மாற்றுக் கலாசாரம், மாற்றுப் பொருளாதாரம், மாற்று சினிமா... என, சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் சமூகக் காரணிகளை நெறிப்படுத்து-கிற சிந்தனைகள் பெருகி வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட மருத்துவத்திலும் மாற்று காணவேண்டிய அவசியம் ஏற்பட்-டுள்ளது. வாழ்வாதாரங்கள் அனைத்தும் வணிகமயமாகிப்போன சூழலில் சமூக உணர்வோடு எழுதப்பட்-டிருக்கும் நூல், ‘உடலின் மொழி’.

அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் மூன்றே மாதத்தில் இரண்டாம் பதிப்பு கண்ட புத்தகம், ‘உடலின் மொழி’. அதுவும் இரட்டிப்பு பிரதிகளாய் அச்சாகிறது. நூலக உதவி இல்லாமல் என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இதனை எழுதியவர் கவிஞர் உமர்பாரூக். இவர் ஏற்கனவே கவிதை, சிறுகதை என ஆறேழு நூல்கள் எழுதி உள்ளார். எந்தப் பிரபலமுமில்லாத இவரது புத்தகத்தின் பிரத்தி-யேக தன்மை குறித்தான உரையாடலே இச்சந்திப்பு. அ. உமர்பாரூக். தமுஎகசவின் மாநிலக் குழு உறுப்பினரும் கூட.

Umar Farook உடல்மொழிக்கும் - உடலின் மொழிக்கும், பௌதீக ரீதியில் வேறுபாடுகள் உள்ளனவா?

உடல்மொழி _ புறவயமானது. உடலின் மொழி _ அகம் சார்ந்தது.

உடல்மொழி _ உடல் உறுப்புகளின் புறவயப்-பட்ட அசைவுகளால் தோன்றும் இயக்கத்தைக் குறிப்பது. திரைப்படம் நாடகம் மற்றும் நிகழ்த்து கலைகளிலும் புழங்கிவரும் சொல் இது. ஆனால் உடலின் மொழி என்பது அகவயப்பட்டது எனச் சொல்லி இருக்கிறோம் அல்லவா. அது ஒவ்வொரு மனிதனின் உடலினுள் இயங்கும் இயக்கத்தை உணர்வுகளின் மூலம் _ பிரத்தியேகமான உணர்ச்சி-களின் மூலம் கண்டு கொள்வது. உதாரணமாக எனக்கு பசி ஏற்படுவதை, தாகம் எடுப்பதை நீங்கள் உணர முடியுமா... அதை நானேதான் உணர வேண்டும் அதுதான் _ அந்த மொழிதான் உடலின் மொழி. நமது உடல் விடுக்கிற குரலை உணர்கிற எவரும் உடலின் மொழியை அறிந்திட முடியும். ‘இந்த மொழியை உணரத் தெரியாத மக்களைத்தான் நோய்களும், மருந்துகளும் சுற்றி வளைக்கின்றன.

இந்நூல் மருத்துவர்களுக்காக எழுதப்பட்டதா... அல்லது மக்களுக்காக எழுதப்பட்டதா?

யாருக்கெல்லாம் தன்னுடைய உடலைப் பற்றிய அறிவும், உடலின் மொழியும் தெரியாதோ அவர்களுக்காகத்தான் எழுதப்பட்டது. முன்பெல்லாம் உடலின்மொழி தெரிந்த மருத்துவர்கள் நிறைய இருந்தார்கள். மக்களும் நன்றாக இருந்தார்கள். இப்போது கருவிகளின் மொழியைத்தான் அறிந்திருக்-கிறார்கள். நம்முடைய பாட்டனும் பூட்டனும் அறிந்திருந்த உடல் ரகசியங்களும், உடலின் மொழியும் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் பார்வையோடு அவற்றை நினைவூட்டுவதற்குத்தான் இந்நூல்.

இதனுடைய தேவை என்று எதனை உணர்கிறீர்கள்...?

இயற்கையான மனிதனின் உணர்வுகளை அழித்தொழிக்கிற வியாபாரத்தை மட்டுமே மைய-மாகக் கொண்ட மருத்துவ வணிக கலாசாரம்தான் இந்தத் தேவையினை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய் எது என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (கீ.பி.ளி) ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. எதுவாக இருக்குமென நீங்கள் யூகிக்கிறீர்கள்....? எய்ட்ஸா....? கான்சரா...-? சர்க்கரை நோயா...? இல்லை இப்போது வந்திருக்கும் பன்றிக்காய்ச்சலா....?

இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்தால் நல்லது என்று பிரார்த்தனை செய்தார்கள் பெருமுதலாளிகள். மருந்துகள், தடுப்பூசிகள் என்று உலகப் பொருளா-தாரத்தை ஏப்பம் விடலாமே அதற்காகத்தான்.

கணக்கெடுப்பின் முடிவு சொன்னதோ _ ‘அனிமியா’ எனும் ரத்த சோகைநோய்.

மூன்றுவேளை சோற்றுக்கு வழியில்லாமல் உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு ரத்தசோகை பீடித்திருக்கிறது. எல்லா அரசாங்கங்-களும் உலக சுகாதார நிறுவனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும்...! வழங்குமா...? மருந்து கொடுக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்-கில் மருந்துக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவருவார்கள். உணவு வழங்க...?

இதுபோல இன்னும் நிறைய சொல்லலாம். இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படுகிற எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, கோடிக்-கணக்கான பணம் கை மாறுகிறது. இந்த நோய்க்கு காரணம் எனச் சொல்லப்படுகிற இந்த எச்.ஐ.வி. வைரசைக் கண்டுபிடித்த லண்டன், பாஸ்டர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் லுக்மோன்பிக்னியர், தான் கண்டுபிடித்த எச்.ஐ.வி. கிருமிக்கும் எய்ட்சுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் அதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை கலிபோர்னிய பல்கலை பேராசிரியர்கள், ரசாயனத்துறையில் நோபல்பரிசு பெற்ற ஞிக்ஷீ. வால்டர் கில்பர்ட் என நிறைய அறிஞர்கள் உறுதிப்படுத்து-கிறார்கள்.

இதுபோன்ற செய்திகளையெல்லாம் வெளியிடப்-படுவதில்லை. இன்றைய சமூகச் சூழலில் மருத்துவத்-திலும் பெரிய தவறான அரசியல் நடமாடுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் இதுபோன்ற மாற்றுப் பாதைகளின் தேவை ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறோம்.

Book இன்றைய நிஜங்கள் எனப்படுகிற பலவற்றை உடைக்கிறது இந்நூல். (உ.ம்) உடற்பயிற்சி, நடை-பயிற்சி. இந்தப் பயிற்சி வகைகள் எதன் அடிப்படை-யில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீர்கள்...?

உடற்பயிற்சி என்பது புத்துணர்வுக்காக என்று சொல்லப்படுகிறது. சரி. புத்துணர்ச்சி உறங்கி எழுவதில் கிட்டுமா... பயிற்சி பசி எடுத்தால் கிடைக்குமா. நாள் முழுக்க உழைத்துக் களைத்த-வரிடம் கேளுங்கள். தூங்க விடுங்கள் என பதில் கூறுவார்.

உடல் இயற்கையானது _ இயல்பானது. பயிற்சி செயற்கை. கன்றுக்குட்டிக்கு பாலருந்த யார் பயிற்சி தந்தது. ஆனால் பால்கறப்பவருக்கு பயிற்சி தேவை. இயல்பான உடலுக்கு எந்தப் பயிற்சியும் தேவை-யில்லை. எந்த மருத்துவம் இவற்றை பரிந்துரைக்-கிறதோ, அது, அதன் குறைபாட்டை மறைக்கும் ஏற்பாடுதான் இந்தப் பயிற்சிகள். கண்களில் குறைபாடு என்றால் கண்களை குணப்படுத்துவதுதானே மருத்துவம். மாறாக கண்ணாடி வாங்கச் சொல்வது வியாபாரமில்லையா. நடக்க முடியாதவருக்கு நலம் பெற சிகிச்சைதான் வேண்டும். ஊன்றுகோல் எடுக்கச் சொல்வது யாருடைய வேலை.

சர்க்கரை நோயாளியை நடக்கச் சொல்வார்கள் நடந்தால், உடல் களைத்து பசிக்கும். பசிக்கு சாப்பிட-வும் விடமாட்டார்கள். நிறைய நடப்பவர்களுக்கு எலும்பு தேய்ந்துவிட்டதால் மூட்டுவலி வந்திருக்கிறது என்று கூறுவார்கள்.

நவீன மருத்துவத்தின் ஆராய்ச்சிகள் உடம்பிற்கு வெளியே நடைபெறுகிறது. இந்த ஆராய்ச்சிகளைக் கொண்டு, நடக்க வேண்டும், ஓட வேண்டும். சிரிக்க வேண்டும் என்ற முடிவுகளுக்கு வரமுடியும். இப்போது நடப்பதற்கும் மிசின் வந்திருக்கிறது. அதில் ஏறி நின்றால், போதுமாம், நடந்ததற்குச் சமமாகுமாம். இப்படி அவர்களது ஒவ்வொரு பரிந்துரைகளும், மருந்துகள் மெசின்... என எதையாவது நம் தலையில் கட்டிவிடும் எல்லாமே லாப நோக்கில்தான் இருக்கிறது.

உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ‘சிறப்பு மருத்துவர்’ என துறைவாரியாக அமைந்த மருத்துவ உலகம் இது. ‘கழிவுகளின் தேக்கம் - சக்திக் குறைபாடு’ என்று எளிமையாக பகுக்கப்பட்ட மருத்துவ உலகில் இந்த ‘நாட்டு வைத்தியம்’ சரிப்பட்டு வருமா...?

உடல் என்பது தனித்தனி உறுப்புகளின் எந்திரச் சேர்க்கை அல்ல. அது ஒரு ஒருங்கிணைந்த இயக்கம். கண் மருத்துவருக்கு கல்லீரலைப் பற்றித் தெரியாது. கல்லீரல் சிறப்பு மருத்துவருக்கு (பிமீஜீணீtஷீறீஷீரீஹ்) கண்களைப் பற்றித் தெரியாது. தனித்தனியான சிறப்பு மருத்துவர் என்பது கேலிக்கூத்துதான். மஞ்சள்-காமாலை வந்தால் நவீன மருத்துவப்படி கல்லீரல்தான் பாதிக்கப்பட வேண்டும். ஆனால் கண்கள் மஞ்சள் நிறம் அடைகின்றன. அக்குபங்சர் மருத்துவத்தில் கண்கள் என்பது கல்லீரலின் புற உறுப்புகள்.

நம்முடைய தொன்மையான மருத்துவங்களை ‘சிஷீuஸீtக்ஷீஹ் ஜிக்ஷீமீணீtனீமீஸீt’ நாட்டு மருத்துவம் என்றும், இதை பின்பற்றுவோர்களை ‘சிஷீuஸீtக்ஷீஹ் தீக்ஷீuts’ காட்டு-மிராண்டிகள் எனவும் அழைத்தார்கள் ஆங்கி-லேயர்கள். அவர்கள் தந்த மருத்துவத்தை நம் மருத்துவமாக ஏற்றுக் கொண்டு நமது மருத்துவத்தை ‘மாற்று மருத்துவம்’ என்று கூறுகிறவர்கள்தான் நாம்.

உலகில் எல்லா நோய்களும் உடலின் சக்திக் குறைவால் ஏற்படுபவைதான். ஆங்கில மருத்துவம் கூறும் தொற்று நோய்களில் கூட பத்துபேரில் இரண்டு பேருக்குத்தான் அந்த நோய் வருகிறது. ஏன் என்று கேட்டால், எதிர்ப்பு சக்தி குறைவிருந்த-தால்தான் நோய்தொற்றும் என்று அவர்களே கூறுகிறார்கள். அதையேதான் மாற்று மருத்துவர்-களும் கூறுகின்றனர்.

இந்த நூலின் சிறப்பம்சம் எழுதப்பட்டிருக்கிற மொழி ஒரு மருத்துவ நூலுக்கான மொழியாக உணரமுடிய வில்லை. இந்த எளிமை எங்கிருந்து கிட்டியது?

எனது இந்த எளிமையான மொழி _ தமுஎகச அளித்தது. மக்களுக்கு எதையாவது சொல்ல விரும்பினால் மக்கள் மொழியில் சொல்வதுதானே சரியாக இருக்கும்.

என் பள்ளிப் பாடத்தை முடித்து வாழ்க்கையைக் கற்கத் துவங்கிய போதே என்னை அரவணைத்துக் கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். மக்கள் விழிப்புணர்வு, சமூக மேம்பாடு போன்ற கருத்தாக்கங்களை எனக்குள் ஏற்படுத்தியது அந்த அமைப்பு. அதற்குப் பின்பான என் மருத்துவத் தேடலின் அடியுரமாகவும் இன்றுவரை வழிகாட்டி-யாகவும் இருப்பது இந்தச் சங்கம்தான்.

நீங்கள் ஒரு துறைசார்ந்த மருத்துவராக இருந்தாலும் அதனை வெளிக்காட்டாத உங்கள் நேர்மை பாராட்டத் தக்கது. இது இயல்பாக வந்ததா... திட்டமிடப்பட்டதா..?

இன்றைய உலகம் சந்தைமயமானது. ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால் அதன் பின்னால் லாபநோக்கம் இருக்குமென்று சந்தேகப்பட வேண்டிய காலம் இது. அப்படி நான் சார்ந்திருக்கும் அக்குபங்சர் மருத்துவத்தை இந்த நூலில் பரிந்துரைத்தால் அதன் விழிப்புணர்வுப் பணி பாதிப்படையலாம். அதனால்தான் அது தவறு என்பதை மட்டும் சுட்டிக்காட்டி மருத்துவ மூட நம்பிக்கைகளை வேரறுக்கும் முயற்சியாக இந்நூலை எழுதினேன்.

‘சும்மா இருப்பதே சுகம்...’ - என்பதில் ‘சும்மா’ என்பது எது...?

இந்தவரியில் ஆன்மிகவாதிகள் சொல்லுகிற ‘சும்மா’ வேறு. நான் அதற்குள் போகவில்லை. உடல் தன்னைத்தானே சரி செய்து கொண்டிருக்கும் போது -_ நாம் அதற்கு ஒத்துழைக்கும் போக்கில் ஏதும் செய்யாமல், இருப்பதே சும்மா அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

இருமல் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டால் நுரையீரலில் இருந்து சளி வெளியேறுகிறது என்று அர்த்தம். ஆனால் மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுத்து சளி வெளியேறுவதை தடுத்து நிறுத்து-கிறார்கள். உள்தேங்கிய சளி ஆஸ்த்துமாவையும், காசநோயையும் ஏற்படுத்தும் இப்படி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக சும்மா இருந்தாலே சிலநாள் இருமலில் சளி வெளியேறி விடும். இதுதான் சும்மா இருப்பது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படுகிற மருத்துவ தொழிலில்... உங்களது இந்த முறையினை மக்கள் எவ்வாறு நம்பி வருவார்கள் என எதிர்பார்க்கி றீர்கள்...?

மருந்து மாத்திரைகளை வருஷக்கணக்கில் சாப்பிட்டு வருபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். விரும்பித்தான் சாப்பிடுகிறீர்களா என்று. எல்லோருமே உடல் நலத்தைத்தான் விரும்புகிறார்கள். முழு உடல் நலம் பெற நோயிலிருந்து விடுபட என்னவழி என்று கற்றுக் கொடுப்பதுதான் மருத்துவர்களின் வேலை-யாக இருக்க வேண்டும். இங்கே அவர்கள் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உடலின் மொழியைக் கற்றுக்கொள்ள மக்கள் ஆவலாய் இருக்கிறார்கள். நாங்களும் எங்கள் மருத்துவர்களும் 2000ஆம் ஆண்டிலிருந்து லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறோம். எங்கள் ‘அக்குபங்சர் இல்லம்’ தமிழகத்தின் 35 மையங்களில் சிகிச்சையையும் வழிகாட்டுதலையும் கொடுத்துவருகிறது. இன்னும் பக்கத்து மாநிலங்களி-லிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் கூட பலர் இங்கே வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். தங்களது மருந்துகளைத் தூக்கி எறிந்து விட்டு!

தங்களது முந்தைய இலக்கிய நூல்களிலிருந்து, ‘உடலின் மொழியினை’ எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்..?

எனது முந்தைய நூல்கள் _ புனைவிலக்கியம். கவிதை சிறுகதை... என்று ஆறு நூல்களை தோழன் அய். தமிழ்மணியோடு இணைந்து எழுதி உள்ளேன். இலக்கியத்தில் நல்ல வாசகன் என்பதைத் தவிர எதையும் செய்ததாகக் கருதவில்லை. மருத்துவ இலக்கியம் என்பது உடல் பற்றிய உயிர் பற்றிய விசயம். மக்கள், இலக்கியத்தையும் மருத்துவத்தையும், வெவ்வேறு தளங்களாகப் பார்க்கிறார்கள். இரண்டுமே ஒன்றுதான். இலக்கியம், சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற முன் முடிவுகளை, ஏற்றத்தாழ்வுகளை உடைக்கிறது. மருத்துவம், உடல்பற்றிய கருத்தாக்கங்களை முன் முடிவுகளை உடைக்கிறது. இரண்டுமே சமூக நலத்திற்கானவை.

‘நூறு வயதுவரை வாழ...’ போன்ற புத்தகங்களில் மலிந்த இந்தப் பதிப்பகத் துறையில் ‘உடலின் மொழி’க்கு என்ன பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்... சொல்ல முடியுமா..?

வணிக நோக்கத்தோடு எழுதப்படும் நூல்கள் இன்று நேற்றல்ல; எல்லாக் காலத்திலுமே உள்ளன. அவை படிக்கப்படலாம் _ பாதுகாக்கப்படுவதில்லை. அது ஒரு சீசன் வியாபாரம்.

பாரதி புத்தகாலயம் போன்ற சமூக அக்கறையுள்ள பதிப்பகங்கள் மக்களுக்கு தேவைகருதி பல நூல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ‘உடலின் மொழி’யின் முதல்பதிப்பு இப்போது விற்றுத் தீர்ந்துவிட்டது. அதைப் படித்துவிட்டு பல கிராமங்களில் இருந்து போன் மூலம் விசாரணைகள் வந்து கொண்டே-யிருக்கின்றன. சந்தேகங்களை கேள்வியாகக் கேட்கிறார்கள். ஒரு நூலைப் படித்துவிட்டு சராசரி மக்களிடமிருந்து இத்தனை கேள்விகள் வரும் என்பதே எனக்கு புதிய அனுபவம்.

மாற்று மருத்துவர்கள் குறித்த ஒரு புதிய பார்வையை ‘உடலின் மொழி’ ஏற்படுத்தி இருப்பது நல்ல மாற்றம். மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற மாற்று மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இங்கேயும் மருத்துவத்தை கூவிவிற்கும் வியாபாரிகள் பெருகிவிட்டார்கள்.

அரசாங்கத்தின் கவனமும் மாற்று மருத்துவத்தின் பக்கம் இல்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி... என எல்லாம் அரசு பாடத் திட்டத்திலும் ஆங்கில மருத்துவக் கோட்பாடுகள் திணிக்கப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் நல்ல மாற்று மருத்துவர்களும் கிடைப்பதரிது.

மக்களே _ தங்கள் உடலைப் புரிந்து கொண்டு, உடலின் மொழியறிந்து, சிகிச்சையையும் தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு வரவேண்டும். மருத்துவர்களின் தேவை குறைந்து மக்களே மருத்து-வர்களாவதுதான் ஆரோக்கியம் அமைவதற்கான ஒரேவழி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com