Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நூல் அறிமுகம்
மக்களாகிய நாம்...
சென்னைத்தமிழன்


மக்களாகிய நாம்,
அ.கி. வேங்கட சுப்ரமணியன்,
கிழக்குப் பதிப்பகம், ரூ. 100

Book “ஏழைகளின் விம்மல் கவனிக்கப்படுவதேயில்லை. சர்வாதிகாரத்தின் ஒவ்வொர் மட்டத்திலுமுள்ள ஜந்துக்களாலும் அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்’’? ஆலிவர் கோல்ட் ஸ்மித். சொன்ன வார்த்தை இன்று வரையில் பழுதில்லாமல் பலித்து வருகிறது. பொதுமக்களாகிய நமக்கு கடந்த இடைத்தேர்தலில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஓட்டுப்போட உரிமையுள்ள ஒவ்வோர் குடிமகனும் தலா ஆயிரத்து ஐந்நூறு வரை மொத்தமாகவோ சில்லரை விலைக்கோ கிடைப்பதாக கூறுகின்றன.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வரிப்பணத்தில் தமக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளுகிறார்கள். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யிடமிருந்து தேசத்தை பாதுகாப்பதே மக்களின் தலையாய பணியாக மாறிவிடுகிறது. இது-தான் நமது குடியாட்சியின் மகத்துவம் அல்லது மகாதத்துவம்.

இந்த அவலத்தை எவ்வாறு எதிர்கொள்வது, பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? நமது சனநாயக கடமைதான் என்ன? என்பதை நாளிதழ் மற்றும் இதர இதழ்களுக்கு எழுதிய கட்டுரை மூலம் ஆசிரியர் அ.கி. வேங்கட சுப்ரமணியன் முன்வைக்கிறார்.

சமூக ஆர்வம் மிளிரும் கட்டுரைகளின் தொகுப்பாக ஒவ்வோர் பக்கமும் வடிக்கப்பட்டுள்ளது. குடியாட்சி, உள்ளாட்சி, கல்வி, வாழ்க்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கருத்துகளும் நிச்சயமாக நல்ல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அறிவியல் ஆய்வு வடிவில் மிகத்தௌ¤வா-னவை. இந்திய துணைக்கண்டத்தில் சனநாயகம் ஒரு கேளிக்கூத்தாக மாறியதன் பரிணாமம் பற்றியதான-வையாகும்.

“நமது மாகாணத்தில் முழு மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவதில் அரசாங்கத்திற்குப் பதினேழு கோடி ரூபாய் நட்டமும் ஏழை எளியவர்களுக்கு எழுபது கோடி ரூபாய் லாபமும் ஆகிறது’’ என்ற ஓமந்தூராரின் எண்ணத்தை பிரதிபளிக்கும் வகையில் மதுவிலக்கு சிந்தனைகள் குறிப்பிடத்தகுந்தவை.

மற்ற மாநிலங்களை ஒப்பு நோக்கும் போது தமிழகத்தில் அதிகமான விதவைப்பெண்கள் உள்ளனர். அதற்கு மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதுதான் காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டை தமிழக அரசின் மீது இந்நூல் வைக்கிறது. இந்த௧ குற்றச்சாட்டிற்கு மறுப்புரையாக தமிழகத்தில் தான் ‘விதவைகள் நலவாழ்வு திட்டம்’ உள்ளதாக கூறுவதை எவராலும் ஏற்க முடியாது எனவும் மறுத்துள்ளார். ஆம் உண்மைதான், மாற்று மருந்து இருப்பதற்காக எப்படி விடத்தை குடிக்க முடியாதோ அது போல தமிழகத்தில் மதுவை ஏற்க முடியாதுதான். இந்த அரசு தண்ணீரை தனியார் மயமாக்கி 'வாட்டர் வாரியத்தை தனியாருக்கு கொடுத்து, குவாட்டர் வாரியத்தை தாமே (அரசே) நடத்தி மக்களை பார்த்து எகத்தாளம் செய்கிறது.

புத்தகத்தை பிரித்து படித்தபோது சில பக்கத்தில் நம்பமுடியாத, ஆனால் உண்மையாக தகவலை அறிய முடிந்தது. சுதந்திரம் பெற்று பொன்விழா கண்ட பின்பும் 2006இல் வரப்பெற்ற காவல் துறையின் நிபந்தனைகளுடன் கூடிய பொதுக்கூட்ட அனுமதி (?) வெளியிட்டுள்ளது. அதில் குடிமக்களாகிய நமது சுதந்திரத்தின் விளிம்பு என்ன என்பது விளங்குகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இல்லாத ஒடுக்குமுறை கூட தற்போது நம்மீது ஏவப்படுவது புலனாகிறது.

மற்றொரு செய்தி ‘சேது சமுத்திர௭ திட்டம்’ குPத்தானது. திட்டத்தினால் பலனடையும் பெரிய கப்பல் நிறுவனத்திற்குகூட எவ்வளவு லாபம் என தெரியாது என கூறியிருப்பது அ.கி. வேங்கட சுப்பிர மணியனின் கூரிய ஆய்௮தறியும் பார்வை பாராட்டத்-தக்கது.

உலக நாடுகள் மத்தியில் ஒபாமா பெருமிதமாக கையசைக்கிறார். பெருமிதத்தின் நிழலின் சாரத்தில் மண்டேலாவின் 27 ஆண்டு காலங்கள் கடந்த சிறை-யனுபவத்தை தரிசிக்க முடிகிறது. சனநாயக உரிமையை சொல்லும்போது வரலாற்றில் நீங்காத இடம் மண்டேலாவுக்கு உள்ளது. அதனால்தான் தமது நூலில் கருப்பினத் தலைவனின் வாழ்க்கை பாடத்தை சேர்த்திருப்பது மிக பொருத்தமானது.

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை தலைவிரித்-தாடியதை கட்டுரைகள் அம்பலபடுத்துகிறது. நீதிமன்றத்தால் சனநாயப் படுகொலை புரிந்தவரை அடையாளம் காட்டினால் கூட தண்டிப்பதற்கான வழிவகை சட்டத்தில் இல்லை என்பதை உணர-முடிகிறது.

கல்விக்கென பெறுகிற நிதி கல்விக்காக செலவிடப்படுவதில்லை என்கிற ஆதங்கத்தை மிகத்துல்லியமாக ஆதாரங்களோடு தருகிறது. ஆரம்பக்கல்வியின் அடிப்படை தேவை கூட நிறைவேற்றப்படாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அதற்கு மாற்றாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் மனோநிலை சரியானதே என ஒப்புக்கொள்ளுகிறார் ஆசிரியர். ஆனால் உரிமைகளை மீட்டெடுக்க மக்களின் ஒன்றிணைந்த போராட்டமே கடைசி ஆயுதம் என்பதை நூல் ஆசிரியர் நியாயப்படுத்துவதில் பட்டும் படாமல் விலகுவதையும் காணமுடிகிறது.

கேரளத்தில் ஐந்து மணிநேரம் தாமதமாக வந்த மருத்துவரை எதிர்த்து சாலை மறியல் போன்றவை நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தால் சாதிக்க இயலாத போக்கினை பல இடங்களில் போராட்டம் சாதித்துள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்களே காரணம் சொல்லி சமாதானம் கற்பிப்பார்கள். தமிழகத்திலும் விழிப்புணர்வு மிகுந்த போராட்டங்கள் நடைபெறுமானால் மக்களாட்சி மாண்புகள் காப்பாற்றபடும் வாய்புள்ளது.

ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல ஒரே கருத்தை சொல்லும் செய்திகள் திரும்பத்திரும்ப இடம் பெறுவது படிக்கும் போது சலிப்பை தருகிறது. மக்களாட்சியின் மகத்துவத்தை முன்வைக்கும் ஆசிரியரின் கருத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை என்பதை சுதந்திரமாக சொல்லும் நூல் ‘மக்களாகிய நாம்’.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com