முகவரியற்ற கடைசி மழை
பா. திருச்செந்தாழை
இந்தச் சாலையில்
சில கனவுகள் பொய்க்க
நசுக்கித் தீர்ந்ததொரு உயிர்
கசிந்தழும் நண்பனின் மனைவிமுன்
மெளனமாகி நிற்கிறார் ஒருவர்
வீட்டுச் சொற்களின் கனத்தில்
வெதும்பிய முதியவன்
காணாமல் போய்க்கொண்டிருக்கிறான்
சைக்கிள் சிறுமியின் தடுமாற்றத்திற்காக
நிதானித்துச் செல்கிறது கனரக வாகனம்
முகவரியற்ற கடைசி மழை
தேங்கிக் கிடக்கிறது அமைதியாக
மஞ்சள் பையில் நிரப்பிய
கவுச்சி வாடை நீங்காத
பெட்டை நாய்க்குட்டிகள்
மெல்லிய பசி முனகலோடு
திசைக்கொன்றாய் பிரியத்துவங்குகின்றன,
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|