என் பேனாவின் பிரசவங்கள்...
பொ. செந்திலரசு
மழை மாலை
சின்னச் சின்ன திருப்பங்களில்
குச்செடுத்துக் கிளறி
தடுக்கும் குப்பைகள்
தரை தட்டும் தடைகள் நீக்கி
முடிந்த மட்டும்
அடுத்த தெருவரை
ஆறேழை அனுப்பி வைக்க
மறுநாள் காலையில்
ஏதோவோர் அபாய வளைவில்
கவிழ்ந்து நனைந்த
கப்பல்களுக்கான
வருத்தங்கள் பகிர்ந்து
மழைக்கான தேவைகள்
பெரிதாய் ஏதுமற்று
ஈரம்பட்ட காகிதத்தில்
ஊறிக்கரையும் மைத்தடங்களென
மழை விளையாட்டை
தோழனிடம் சொல்லிச்சிலிர்க்கவாவது
வேண்டும்
இன்னொரு மழை மாலை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|