|
சில பாடங்கள்
இ.தி. நந்தகுமாரன்
குயிலிடம் இசை கற்று
காற்றுக்கு
சொல்லித்தருகின்றன
சருகுகள்
மீன்களிடம் மொழி கற்று
கடற்கரைக்கு
சொல்லித் தருகின்றன
கடலலைகள்
வண்டிடம் பாடல் காற்று
பூமிக்கு
சொல்லித்தருகின்றன
மலர்கள்
நிலவிடம் கவிதை கற்று
வானுக்கு
சொல்லித்தருகின்றன
விண்மீன்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|