படிப்பு
டாக்டர். கவிக்குரிசில் வே. இரா. பி
பட்டப் படிப்புக்குகூட
இன்று மதிப்பில்லாததால்
பட்ட மரங்களாய்
இளைஞர்கள்!
படிகளில் நின்று
காலேஜ்க்கு பயணம் செய்தவன்
காலேஜ் முடித்ததால்
பல படிகளில்
ஏறுகிறான் வேலைக்காக!
இன்று காலேஜ் சீட்டுகூட
பணக்கட்டுகளால் பெறும்போதும்
வேலைக்காக - அவன்
வெயில் வேகமாக - பட்ட
கடன்களை பட்டபடிப்பு தீர்க்கும்
எனும் நினைப்பில்
படிகளில் ஏறும்போதுதான்
தெரிந்தது அவன் பெற்றோர்கள்
பட்டபாடு
வெறும் காகிதப் பட்டம்
விண்ணின் உச்சியை தொடும்போது
என் பல்கலைக்கழகப் பட்டம் - இன்றும்
பைல்களுக்குள் முடங்கியிருப்பதால்
முணுமுணுத்துக் கொண்டது என் இதயம்
மூளை இல்லாதவருக்கே முதல் மரியாதை
முடிவெடுக்கத் தெரியாதவனுக்கு
மணிமுடி எனும் நிலையில்
என் பட்டங்கள் வெறும் காகிதங்களாகவே
பைலில் முடங்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|