 |
நமக்கென்ன...
அ. இளஞாயிறு
வறண்ட காலத்தில்
வராத மழையை
வைதோம்
பெருவெள்ள நேரத்தில்
வந்த மழையை
வைதோம்
இதமான மழையிலும்
நனைய மறுத்த
குடையை விரித்தோம்
இயற்கை பற்றி பேச
நமக்கென்ன
யோக்கிதை?
இன்னும் ஏன் பொய்யுடன்...
நாகைப் பெரியாரின்
நல்லதொரு உரைகேட்டு
பத்து முடித்த என் மகன்
"படித்தால் இதைத்தான் படிப்பேன்"
என்று ஒற்றைக் காலில் நிற்கிறான்!
உலகத்தரம் வாய்ந்த பள்ளி,
மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற பள்ளி,
முதல் மதிப்பெண் வாங்கிய,
மாணவ, மாணவியர் படித்த பள்ளி,
நூற்றுக்கு நூறு தேர்ச்சி கொடுத்த பள்ளி,
சி.பி.எஸ்.சி பாடப் பள்ளி,
சைனிக் என்றொரு பள்ளி,
ஆங்கிலோ இந்தியப் பள்ளி,
ஆங்கில வழிப் பள்ளி,
இத்துடன்
அரசுப் பள்ளியும் கேட்டாச்சு!
கோடைக்கால சிறப்பு வகுப்பிலும்
தனிப்பயிற்சி பள்ளிகளிலும்
அலைந்து திரிந்து கேட்டாச்சு.
எங்கேயும் அந்தப் பாடம் இல்லையாம்.
கேட்டதற்கு கேலிப் பார்வையே பதில்!
எவன்டா நமக்கான கல்வியை
பாடமாய்த் தொகுத்தவன்?
கல்வியே அந்தப் பாடத்தைத் தொடாதபோது
இன்னும் ஏன்
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்
என்கிற பொய்யுடன் பொருளாதாரப் புத்தகம்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Unable to connect to database! Please try again later.
| |