Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே - ஜூலை 2008

உன் சுதந்திரம்
ப. கார்த்திகேயன்

உன் சுதந்திரம் அறிவாய்
பெண்ணே நீ
உன் சுதந்திரம் அறிவாய்

செய்யத் தோன்றுவதையெல்லாம்
செய்யத் தூண்டும் எண்ணத்திற்கு
அறன் அமைத்துக் கொள்வது
உன் சுதந்திரம்

உன் எண்ணத்தில் விளைந்தவைகளை
பகுத்தறிந்திட கல்வி பெறுவது
உன் சுதந்திரம்

நீ கண் விழித்தால்
விழிக்கும் உலகம்
கண் மூடினால்
விழிக்க மறுக்கும் உலகம்

உன் பொறுப்பறிந்து சக்தியை
வழி நடத்துவது உன் சுதந்திரம்

உதிக்கும் ஜீவனுக்குத் தாய்
நீ மட்டுமாகத்தான் இருக்கமுடியும்
அந்த ஜீவனை உய்வடைய
நீ எடுக்கும் முயற்சியது
உன் சுதந்திரம்

நோய் விரட்டும் சக்தியது
உனக்கே சொந்தமென்று
அறிவது உன் சுதந்திரம்

செல்வம் பல படைத்திருந்தாலும்
விருந்தோம்பி மக்களை மகிழ்ச்சி செய்வது
உன் சுதந்திரம்

நம் மக்களை நம் மக்களாகவே
இருக்க இனியொரு அன்னியன்
உட்புகாமல் தடுக்க நீ
விளைவது உன் சுதந்திரம்

மற்றவர் எண்ணுவது போல்
மாம்பாடுபட்டு பணம் செய்வதல்ல
உன் சுதந்திரம்

மட்டில்லா செல்வம்
அது அடுத்த தலைமுறையின்
வரலாறு அதைப் பேணுவதே
உன் சுதந்திரம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com