ஹைக்கூ - கவிதைகள்
சி. வெங்கடேஷ்
1
உண்டியலை உடைத்தேன்
உள்ளிருந்து கொட்டியது
அம்மாவின் வியர்வை!
2
இருந்ததைச் சாப்பிட்டேன்
வெறும் வயிறாய்ச்
சட்டியும் அம்மாவும்!
3
அப்பாவும் சுமக்கிறார்
குழந்தையும் சுமக்கிறது
ஆங்கிலப்படிப்பு
4
முதுகெலும்பாம் உழவு
இறக்குமதி உணவு
இந்தியா விவசாய நாடு
5
வகுப்பறைக் கற்றல்
நன்றாகப் புரிந்தது
பாடம் கடினம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|