சாவித் துவாரத்தில் சூரியன்
திலகவதி
தொடர்ந்து ஹைக்கூ தளத்தில் இயங்கியபோதும் நீர்த்துப் போகாத தன்மையுடன் ஹைக்கூகளை தந்து கொண்டிருப்பவர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி. தான் படைப்பாளியாக இருப்பதுடன் எழுதத் துவங்கி, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வழிதேடுகிற துவக்ககால படைப்பாளிகளை ஊக்கப்படுத்தவென்று கூட்டுத் தொகுப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
அப்படியான தொகுப்புதான் சாவி துவாரத்தில் சூரியன். சுண்டக் காய்ச்சிய பாலின் சுவையோடு மிளிர்ந்திருக்கிறது. ஹைக்கூ தள பாடபொருள்களையே கொண்டிருந்தாலும், தனிச்சிறப்புடன் தொகுக்கப்பட்டிருக்கிறது.
இத்தொகுப்பின் கூடுதல் சிறப்பம்சம் மாணவர்களுக்கும் வாய்ப்பளித்திருப்பது. ந.சோபனா தேவி, மு,சிவகணேசன், கு.அ.தமிழ்மொழி, கு.அ.அறிவாளன், தி.தீபா, ப.தரணி இவர்கள் யாவரும் மாணவப் படைப்பாளிகள். புதியவர்களின் எழுத்துகளைப் போலில்லாமல் செறிவுடன் படைக்கப்பட்டிருக்கிறது. ஹைக்கூவின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் தன்மை வெளிப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகள், மன உளைச்சல்கள், வேலைப்பளு இவைகள் கூட்டுத் தொகுப்பின் பிரச்சனைகள். இவற்றையெல்லாம் கடந்து தொகுப்பு அழகிய அச்சமைப்புடன் வந்திருப்பது பாராட்டிற்குரியது.
தொகுப்பு : சாவித் துவாரத்தில் சூரியன் ஹைக்கூ தொகுப்பு நூல்
தொகுப்பாசிரியர் : நிலா கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு : நடவு வெளியீடு, 4/37, சென்றாம்பாளையம், தாமரைக்குளம் (அஞ்சல்), கிணத்துக்கடவு(வழி), பொள்ளாச்சி- 642 109.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|