மாணவர் பக்கம்
ரா. ஜெகநாதன், 11ஆம் வகுப்பு, அரசு மேனிலைப் பள்ளி, ஆனைமலை
இறப்பு
உயிரும் உறங்க
உடல்விட்டு செல்கிறது
உலகிடம் வருகிறேன் எனக்கூறி!
குப்பைமேடு
உனை குப்பையென்றெண்ணுபவன்
மனம் பெரிய
குப்பை மேடு!
பன்றி
நீதான் தூய்மையானவன்
நன்னீர்
இல்லையென்றாலும்
கருநீரிலாவது
குளிக்கிறாயே தினமும்!
வாழ்க்கை
சித்ராதேவி, 12ஆம் வகுப்பு, அரசு மேனிலைப் பள்ளி, ஆனைமலை.
உணர்ந்துபார்
தேடல்களினுள்தான்
வாழ்க்கையென்பதை-
வாழ்ந்துபார் வாழ்க்கையை
நம்பிக்கையோடு
குப்பைத் தொட்டியில் விழாமல்
பத்திரமாய் பார்த்துக்கொள்
உன் வாழ்க்கையை!
பிறர் நீர் ஊற்றி நீ வளர
செடியாக இருக்காதே!
உன்னால் பிறர் பயன்பெற
மழை உருவாக்கும் மரமாக இரு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|