Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

நிஜ உலக நாயகர்கள்
ச. கோபிநாத், சேலம்.

நீண்ட வரிசையின் நிதானிப்பில்
மெல்ல நகர்கிறது
திரையரங்க வாயிலில்
ரசிகர்களின் பெருங்கூட்டம்!

மாத வருமானத்தின்
மகத்தான பகுதியை
திரையரங்க நுழைவுச்சீட்டு
விழுங்கிவிட
அறிவிக்க இயலா உணர்வுகளை
அசைபோட்டுப் பார்க்கும் மனம்!

எல்லை மீறிய
ரசிகனின் போற்றுதலுக்கு
எடுத்துக்காட்டாக
வானுயர நிற்கும்
நாயகனின் நிழலுருவத்திற்கு
அபிஷேகப்படுத்தப்டுகிறது
பல குடங்களில்
வெறுமையை நிரப்பிய பால்!

நிலைபெற்று நிற்கும்
உன்னதத்தைத் தொலைத்த
நிஜ உலக நாயகர்கள்
தங்களின் வெற்றியை
தொலைத்த எதிர்காலத்தை
எதிர்பார்த்தபடி
கண்டுமகிழ்கின்றனர்
நிழலுலக நாயகனை!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com