Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2008

தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மனுதர்ம’ப் பார்வை


பெரியார் திராவிடர் கழகத்தினரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கண்டித்திருக்கிறது. ‘இந்து’ பத்திரிகை தாக்கப்பட்டதற்காக, மார்க்சிஸ்ட்டு கட்சியினர் கண்ணீர் வடிக்கிறார்கள். “விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்த வன்முறையாளர்கள் அறிவித்திருப்பது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலேயாகும்” என்று அக்கட்சியின் செயற் குழு தீர்மானம் கூறுகிறது. நடந்த தாக்குதல் பெரியார் திராவிடர் கழகம் தீர்மானம் போட்டு, கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடந்த ஒன்று அல்ல. உணர்வுள்ள கழக இளைஞர்கள். தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் - ‘தீக்கதிர்’ திரித்து கூறுவதுபோல், விடுதலைப்புலிகளுக்கு எதிரான விமர்சனத்துக்காக அந்த எதிர்ப்பு காட்டப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட, அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் நடைபெறும் நாளன்று, ‘தமிழகத்தில் இனவெறி ஆபத்து’ என்று கட்டுரை எழுதி, ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு கண்டனக் குரல் கொடுப்பதே இனவெறி என்று ‘இந்து’ எழுதியதற்காக எழுந்த எதிர்வினைதான் அந்தத் தாக்குதல். ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யாமல் போரைத் தொடர வேண்டும் என்று கூறுகிறது அக்கட்டுரை. நியாயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே இதைக் கண்டித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கிஞ்சித்தும் மதிக்காமல் ஈழத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதல் தொடர வேண்டும் என்ற ஆத்திரமூட்டக்கூடிய கட்டுரை வெளியிடுவோரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், பெரியார் திராவிடர் கழகத்துக்கு ‘வன்முறையாளர்கள்’ பட்டம் சூட்டுகிறது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

மக்கள் மீது ராணுவத் தாக்குதலை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று எழுதும் ‘இந்து’வை ‘அகிம்சாமூர்த்தி’ என்கிறார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘மனுதர்ம’ப் பார்வையிலிருந்து மீளப் போவதே கிடையாதா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com