Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2007

தலித் உரிமைகளை மீட்டுத் தந்த இரு வழக்குகள்

தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த இனியன் கவுதம் என்ற தலித் மாணவருக்கு கல்விக் கடன் வழங்க புரசைவாக்கம் ‘பாங்க் ஆப் பரோடா’ மேலாளர் மறுத்துவிட்டார். குடும்பத்தில் முதல் தலைமுறையாக பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் மாணவன். இத்தனைக்கும் மாணவனின் தந்தை இந்த வங்கியில் 14 ஆண்டுகாலம் கணக்கு வைத்துள்ளார். மதிப்பெண்களைப் பார்க்காமல், தொழில் கல்லூரிகளில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கடன்தர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினாலும், வங்கி நிர்வாகம், தலித் என்றால் சட்டத்தை மீறியே செயல்படுகிறது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ப. ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. கழக வழக்கறிஞர் குமாரதேவன், பாதிக்கப்பட்ட மாணவருக்காக வாதாடி வெற்றி பெற்றுள்ளார். வங்கி நிர்வாகம் கடன் வழங்க மறுத்தது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து கடனை வழங்க உத்தரவிட்டது.

மற்றொன்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் தொடர்ந்த வழக்கு. அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான 522 விரிவுரையாளர் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தன. இதில் 300 பதவிகள் மட்டும் முதல் கட்டமாக நிரப்பப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இது 2000 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் முன் அரசு தந்த உறுதிக்கு எதிரானது என்று வழக்கு மனுவில் கூறப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி. ராம சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு, 522 பதவிகளையும் உடனடியாக நிரப்ப, உத்தர விட்டுள்ளது. புனித பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் அரி பரந்தாமன் வாதாடினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP