மீட்டு எடுப்போம்
த.பு. மூர்த்தி
நாத்திக காற்றில்
சாத்திக் கொள்கிறது
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
மடமையாய் இருந்த
தடைகள் எல்லாம் மடிந்துவிட்டது
பகுத்தறிவு பாதையில்
சூழ்ச்சமங்களாய் இருந்த வலை
சுருண்டு விட்டது
சுயமரியாதையால்
அடிமை சமுதாயம் எதிரியை
அடக்க அலையாய் எழுகிறது
விடுதலை என்னும் பெயரால்
குரல் கொடுத்தால்
அதிர்ந்துவிடும் அக்கிரகாரமே
இனி
மண்ணுக்காக அலைந்தவர்கள்
மடிந்து தான் போக வேண்டும்
மண்ணை மீட்டெடுப்போம்
ஆதி தமிழராய் நாமளே ஆளுவோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|